இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

எலினோர்: உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும் புயல் அபாயம்

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  காற்று 145 கி.மீ வேகத்தில் வீசத் தொடங்கியுள்ள நிலையில், பறந்துவரும் உடைந்த பொருட்களால், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

  இந்த புயலின் காரணமாக, வடக்கு இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் தென்மேற்கு ஸ்காட்லாந்து ஆகிய இடங்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

  இதனால், வடக்கு அயர்லாந்தில் 12 ஆயிரம் வீடுகளிலும், இங்கிலாந்தில் 2,700 வீடுகளிலும், வேல்ஸில் 460 வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

  புயலின் சீற்றத்தால், சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த குளிர்காலத்தில் ஐக்கிய ராஜ்ஜியத்தை தாக்கும் ஐந்தாவது, பெயரிடப்பட்ட புயல் இதுவாகும்.

  நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வீழ்ந்துள்ளதால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புயல் தீவிரமடைவதால், மக்கள் அபாயகரமான சூழலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  செல்ஃபி எடுக்க வேண்டாம்

  வெள்ளப்பணிகளை நிர்வகிக்கும் மேலாளரான காரோல் ஹொல்ட், மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

  கடற்கரை பகுதிகளில் பயணிக்கும்போது, கவனமாக இருக்கவும், புயலில் செல்ஃபி எடுப்பதற்காக, யாரும் தேவையற்ற அபாயத்தை தேடிச்செல்ல வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  நீங்கள் பயணிக்கிறீர்கள் என்றால், உங்கள் வழித்தடம் குறித்து விசாரித்து செல்லுங்கள், வெள்ள நீரினுள் புகுந்து செல்ல வேண்டாம்

  வேல்ஸின் இயற்கை வளங்களுக்கான பிரிவின் அதிகாரியான செரி ஜோன்ஸ், எங்களின் அறிவுரை என்னவென்றால், கடற்கரை மற்றும் படகுகள் வந்து நிறுத்தப்படும் பகுதிகளை மக்கள் தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறோம். பெரிய அலைகள், உடைந்த பொருட்களை கொண்டுவந்து உங்கள்மீது போடலாம் அல்லது உங்களை கீழே தள்ளலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

  பிற செய்திகள்:


  BBC Tamil
  English summary
  Winds of up to 90mph (145kph) forecast for the UK could pose a danger to life because of flying debris, the Met Office is warning.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற