பிலிப்பைன்ஸிஸ் 5.9 ரிக்டர் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை #mindanao #Davao

Subscribe to Oneindia Tamil

டாவோ: பிலிப்பைன்ஸில் 5.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டனோவா தீவில் கடலுக்கு அடியில் 12.4 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை. அதேபோல சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதாக தெரியவில்லை. நிலநடுக்கத்தின் அளவு 5.7 ரிக்டர் என ஐரோப்பிய தரைக்கடல் புவியியல் மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூகம்பத்தின் பாதிப்புகள் தொலை தூரத்தில் உள்ள டாவோ நகரம், புடுவான், டாகும், பிஸ்லிங், மாடி ஆகிய தீவுகளிலும் உணரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பிலிப்பைன்ஸ் முழுவதும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்படலாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

பூகம்பம் தாக்கக் கூடிய அபாயகரமான பகுதியில்தான் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளது. அடிக்கடி இங்கு பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரை நிலநடுக்கம் நடுங்க வைத்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பிலிப்பைன்ஸை பூகம்பம் தாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+