ஆஸ்திரேலியா அருகே உள்ள வனுவாது தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவு
வனுவாது: ஆஸ்திரேலியா அருகே உள்ள வனுவாது தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்தது.
தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா அருகில் உள்ள வனுவாது தீவில் செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்தது.

போர்ட் ஓல்ரியில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு 131 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதால் நிலப்பரப்பில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
3 நிமிடங்கள் நிலம் மற்றும் மரங்கள் அதிர்ந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் வனுவாதுவில் 27 முறை ரிக்டர் அளவுகோலில் 7க்கும் மேற்பட்ட அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வனுவாது தீவில் நிலநடுக்கம் ஏற்படுவது சாதாரணமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications