மெக்சிகோவில் அதிகாலையில் நிலநடுக்கம், தூக்கத்தில் இருந்து விழித்து தெருவுக்கு ஓடிய மக்கள்
Subscribe to Oneindia Tamil
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் இன்று சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியதில் கட்டிடங்கள் குலுங்கின, மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடினர்.

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 2.36 மணிக்கு திடீரென சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின, வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. தூக்கத்தில் இருந்து அலறியடித்து எழுந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.
டெக்பான் டி ஹலேனா நகரை மையமாக கொண்டு தாக்கிய இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியிருந்தது. கடந்த வியாழக்கிழமை மெக்சிகோவில் 6.4 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியது. ஆனால் அதிருஷ்டவசமாக உயிர்சேதம் ஏதுமின்றி மக்கள் தப்பினர். இன்றைய பூகம்பத்தின் சேத மதிப்பு உடனடியாக வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications