'அதற்குள்' மாட்டிக்கொண்ட மாணவனை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
பெர்லின்: பெண் உறுப்பை போன்று, வடிவமைக்கப்பட்டுள்ள கல் சிலையின் அருகே நின்று, போட்டோ எடுக்க முயன்ற மாணவர் அந்த சிலைக்குள் சிக்கிக்கொண்டு தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் துபின்ஜென் நகரில் மைக்ரோபயாலஜி மற்றும் வைராலஜிக்கான இன்ஸ்ட்டிடியூட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதன் எதிரே சிற்பக்கலைஞர் பெர்னாண்டோ டி லா ஜரா என்பவர் பல வகை சிற்பங்களை செதுக்கி வைத்துள்ளார்.

மார்பிள் சிலை
அந்த சிலைகளில் பெண் உறுப்பு போன்ற மாதிரி உருவமும் ஒன்றாகும். 32 டன் எடையுள்ள அந்த சிலை முழுக்க செந்நிற மார்பிளால் பளபளவென உருவாக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுக்க முயற்சி
சம்பவத்தன்று அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவன், தனது நண்பர்களுடன், இந்த பகுதியை சுற்றிப்பார்க்க வந்துள்ளார். அப்போது இச்சிலை அந்த மாணவனை வெகுவாக கவர்ந்துள்ளது. அதன் அருகே சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்துள்ளார்.

சிலையால் வந்த வினை
சிலை மீது ஏறி உட்கார்ந்து வித்தியாசமாக போஸ் கொடுக்கலாம் என்று முயன்றபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்துவிட்டது. 2001ம் ஆண்டு முதல், சிலை நிறுவப்பட்டுள்ளபோதிலும், இதற்கு முன்பு எப்போதுமே நிகழாத விபரீதம்தான் அது.

எவ்ளோ முக்குனாலும் முடியலை..
பெண் உறுப்பு சிலையின் துவாரத்திற்குள் மாணவன் எதிர்பாராமல் விழுந்துவிட்டார். ஆனால் உடல் கற்களுக்குள் இறுகிக் கொண்டதால், சிலையைவிட்டு வெளியே வரமுடியவில்லை. எவ்வளவோ உடலை நெளித்தும், வளைத்தும் அவர் எடுத்த முயற்சிகள் வீணாகின.

லாரிகளில் வந்த வீரர்கள்
இதையடுத்து மாணவனின் நண்பர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். முதலில் ஒரு வண்டியில் வந்த வீரர்கள் போராடியும் மாணவனை மீட்க முடியாமல் போகவே, மூன்று லாரிகளில் வந்த 22 வீரர்கள் பல மணி நேரம் போராடி சிலைக்கும் சேதம் வராமல் மாணவனை மீட்டுள்ளனர்.

சிலையிடமே சில்மிஷமா..?
நகர மேயர் போரிஸ் பல்மர் இதுகுறித்து கூறுகையில், "போட்டோ எடுக்க போய் இவ்வாறு சிக்கிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன். சிலையிடம் ஏதோ சில்மிஷம் செய்யப்போய்தான் சிக்கியிருக்க வேண்டும். இருப்பினும் அவ்வளவு பெரிய சிலை துவாரத்தில் எப்படி சிக்கினார் என்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பரம ரகசியமாம்..
இதனிடையே சிலைக்குள் சிக்கிய மாணவன் பெயரை வெளியிடாமல் வைத்திருக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இந்த சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications