மனுஷனா நீ... உரிமையாளர்களுக்கு உதவாதவர்களைப் பார்த்து "முறைக்கும்" நாய்கள்!
டோக்கியோ: தன்னுடைய உரிமையாளர்களுக்கு உதவி செய்யாதவர்களை நாய்கள் வெறுப்பதாக ஜப்பான் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களுடனே பழகி, குடும்பத்தில் ஒருவராக வாழும் அளவிற்கு செல்லப்பிராணியாக நாய்கள் உள்ளன. சில நாடுகளில் நாய்களுக்கென பள்ளிகள், விளையாட்டுக் கூடங்கள், சொகுசு அறைகள் மற்றும் பியூட்டி பார்லர்கள் கூட இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ஜப்பானில் நாய்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப் பட்டுள்ளது.

ஆய்வு...
டோக்கியோவின் கியோட்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் 18 நாய்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அந்த ஆய்வில் நாய்களின் உரிமையாளர்கள் ஒரு பெட்டியை திறக்க வேண்டும். உரிமையாளருக்கு உதவி செய்வதற்கு இரண்டு அந்நியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

உதவிக்கு 2 பேர்...
ஆனால் அதில் ஒருவர் மட்டுமே உதவி செய்கிறார். மற்றவர் உரிமையாளருடனோ நாயுடனோ பேசவோ அல்லது உதவியோ செய்யாமல் இருக்கிறார். உரிமையாளர் பெட்டியை திறக்கும் இந்த காட்சிகளை அவர்களின் நாய்கள் பார்க்க வைக்கப்பட்டன.

சாப்பிட மறுப்பு...
பின்னர், உதவி செய்த அந்த இரண்டு நபர்கள் மூலம் அந்த நாய்க்கு தின்பதற்கு பண்டங்கள் தரப்பட்டது. அப்போது உதவி செய்யாத நபர் தந்த உணவுகளை நாய்கள் சாப்பிட மறுத்து விட்டது.

மனிதர்களைப் போலவே...
இதன் மூலம், தனது உரிமையாளருக்கு உதவி செய்யாதவர்களை நாய்கள் வெறுப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே, மனிதர்களைப் போலவே நாய்களும் உணர்ச்சி அடிப்படையில் முடிவுகளை எடுப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications