ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளவில் மின் தடை! லட்சக்கணக்கான மக்கள் பரிதவிப்பு
ஸ்பெயின்: ஐரோப்பிய நாடுகளில் இன்று திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல்லில் இந்த திடீர் மின் தடை ஏற்பட்டது. மின் தடையால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏடிஎம் சேவைகள், ரயில்கள், விமானங்கள் என பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டு இயல்பு நிலை முடங்கியது.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகலில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மின்சார சேவை தடை பட்டதால் இந்த நாடுகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஸ்பெயினுக்கு மின் விநியோக சேவை அளிக்கும் பவர் கிரிட் நிறுவனமான ரெட் எலக்ட்ரிக்கா நிறுவனம் இது தொடர்பாக விளக்கியுள்ளது.

அதில், மின் விநியோகத்தை சீர் செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது. ஸ்பெயின் மட்டும் இன்றி போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் சிக்னல்கள் செயல் இழந்தன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தலைநகர் மட்டும் இன்றி நாடு முழுக்க பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஸ்பெயின் போக்குவரத்த்து போலீசார் தெரிவித்தனர். லிஸ்போன் மற்றும் போர்ட் ஆகிய நகரங்களில் மெட்ரோ மூடப்பட்டன. ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சிஸ்டம் டவுன் காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா, மட்ரிட், வெலெனிகா மற்றும் சேவில்லே ஆகிய ஸ்பெயின் நகரங்களிலும் போர்ச்சுகள் முழுவதும், பிரான்சின் தெற்கு பகுதியில் மின் தடை ஏற்பட்டு உள்ளது. இந்த திடீர் மின் தடைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. தற்போது பிரான்ஸில் ஏற்பட்ட மின் தடை சீராகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட இந்த திடீர் மின் தடையால் பல லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு உளாகியுள்ளனர். மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தொடர்ந்து காரணத்தை கண்டறியும் பணி நடப்பதாகவும் ஸ்பெயின் அமைச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications