உதவிக்கு வந்த நிலவு.. சூயஸ் கால்வாயில் கப்பல் திரும்பியது எப்படி? பின்னணியில் "சூப்பர் மூன்" சக்தி
எகிப்து: சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டதற்கு பின் சூப்பர் மூனின் சக்தியும் முக்கியமான காரணமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.. அது என்ன சூப்பர் மூன்?
சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த ராட்சச சரக்கு கப்பலான எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பல் நேற்று வெற்றிகரமாக திருப்பப்பட்டது. ஒரு வாரமாக தரைத்தட்டி இருந்த இந்த கப்பலை திருப்ப கடுமையான முயற்சிகள் செய்யப்பட்டன.
இந்த ராட்சத கப்பல் சூயஸ் கால்வாய் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியதால் பல நூறு கப்பல்கள் கால்வாய் வழியாக பயணம் மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டது. தற்போது இந்த எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கிய நிலையில் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து திறக்கப்பட்டுள்ளது.

எப்படி
முதலில் எவர் கிவன் கப்பல் தரைதட்டிய போது அதை திருப்புவதற்கு நிறைய விஷயங்கள் இடைஞ்சலாக இருந்தது. அதில் முதல் விஷயம் அந்த கப்பலில் 2 லட்சம் டன் எடை. இரண்டாவது விஷயம் கப்பலுக்கு கீழ் இருந்த 2 லட்சம் டன் மணல் தேக்கம். இதை நீக்குவதுதான் பெரிய அளவில் கஷ்டமாக இருந்தது.

சிக்கல்
இந்த கப்பலுக்கு கீழ் இருந்த மணலை ராட்சத புல்டோசர் வைத்து 4 நாட்களாக நீக்கினார்கள். இதன் வழியாக தண்ணீர் சென்ற போதும் கூட கப்பல் பெரிதாக திரும்பவில்லை. இதன்பின் டக் போட் எனப்படும் இழுவை கப்பல்களை வைத்து இந்த சரக்கு கப்பலை இழுத்தனர். ஆனால் அப்போதும் இதை முழுதாக இழுக்க முடியவில்லை .

காரணம்
இந்த கப்பலுக்கு கீழே அடியில் இருந்த பாறை ஒன்றுதான் இதை திருப்ப முடியாமல் தடுத்துக்கொண்டு இருந்தது. இந்த பாறைக்கும் மேலே தண்ணீர் சென்று, பாறை உள்ளே சென்றால் மட்டுமே கப்பல் மீண்டும் மிதக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த 5 நாட்களாக பெரிய அளவில் சூயஸ் கால்வாயில் தண்ணீர் இல்லை. அலையும் இல்லை. செங்கடல், ஐரோப்பா கடலில் அலை இருந்தால் மட்டுமே இங்கும் பெரிய அலை வரும்.

நிலா
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் இரவு எகிப்தில் சூப்பர் மூன் எனப்படும் பெரிய பவுர்ணமி ஏற்பட்டுள்ளது. பொதுவாக பவுர்ணமி நாட்களில் கடல் அலைகள் அதிகமாக இருக்கும். பவுர்ணமி காரணமாக ஏற்பட்ட நிலவின் ஈர்ப்பு விசையால் இரண்டு பக்கமும் கடலில் பெரிய அலைகள் தோன்றி உள்ளன.

பவுர்ணமி
இதனால் சூயஸ் கால்வாய்க்கு அதிக அளவில் அலையோடு தண்ணீர் வந்துள்ளது. முக்கியமாக நேற்று முதல்நாள் இரவு அதிக அளவு தண்ணீர் வந்துள்ளது. இதன் காரணமாகவே எவர் கிவன் கப்பலுக்கு தடையாக இருந்த பாறை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. இதுதான் நிலைமையை மாற்றியது.

தண்ணீர்
இதன்பின்பே மொத்தமாக மணல் எல்லாம் அடித்து சென்று, தரைதட்டிய கப்பல் மிதக்க தொடங்கி உள்ளது. மனிதர்கள் இந்த கப்பலை மீட்க அவ்வளவு கஷ்டப்பட்ட நிலையில் ஒரே சொடுக்கில் நிலவு இந்த கப்பலை திருப்பி உள்ளது .. புயல் அடித்து தரைதட்டிய கப்பலை அதே இயற்கை தற்போது விடுவித்து வீட்டிக்கு அனுப்பி உள்ளது!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications