இந்திய மதிப்பில் இவ்வளவு கோடியா? ஒரு கப்பலால் வந்த வினை.. சூயஸ் கால்வாய் அடைப்பால் பெரும் இழப்பு!
எகிப்து: சூயஸ் கால்வாயில் ஏற்பட்டு இருந்த அடைப்பு காரணமாக உலகம் முழுக்க பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாயில் தரைதட்டி இருந்த எவர் கிவன் கப்பல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன் புயலில் தரைதட்டிய கப்பல் பெரிய போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சரக்கு கப்பல் மீட்கப்பட்டாலும் இன்னும் அங்கு முழுமையாக போக்குவரத்து தொடங்கவில்லை. சீரமைப்பு பணிகளுக்கு பின் வரிசையாக ஒவ்வொரு சரக்கு கப்பலாக இங்கு செல்ல அனுமதிக்கப்படும்.

கடல் வழி போக்குவரத்து
உலகின் கடல் வழியான சரக்கு போக்குவரத்தில் 12% போக்குவரத்து சூயஸ் கால்வாய் வழியே மட்டும்தான் நடக்கிறது. அதேபோல் உலகின் 8% திரவ இயற்கை எரிவாயு இதே வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பிரச்சனை காரணமாக சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு மட்டும் தினமும் 15 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சூயஸ் கால்வாய்
இந்த சூயஸ் கால்வாய்தான் எகிப்தின் ஜிடிபியில் 2% பங்களிப்பை கொடுக்கிறது. அதிலும் இந்த ஒருவாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக தினமும் 9.6 பில்லியன் வர்த்தகம் தினமும் நடக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 3.3 மில்லியன் டன் கார்கோ இங்கே செல்ல வேண்டும். அது மொத்தமாக தடை பட்டுள்ளது.

ஒவ்வொரு நிமிடம்
இங்கு கப்பல் தரை தட்டிய ஒவ்வொரு நிமிடமும் மில்லியன் டாலர் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 5 நாட்கள் இந்த கப்பல் தரை தட்டி இருந்தது. அந்த 5 நாட்களில் உலகம் முழுக்க இறக்குமதி, ஏற்றுமதி மொத்தமாக பாதிக்கப்பட்டது. உலக வர்த்தகத்தில் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்ட இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இழப்பு
மொத்தத்தில் 72000 கோடி ரூபாய் இதுவரை சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் என்கிறார்கள் . உலக வர்த்தகத்தில் ஒரே வாரத்தில் 0.4% இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை விண்ணை தொடும் என்கிறார்கள் .

விலைவாசி உயரும்
இந்த இழப்பை சரிசெய்ய இன்னும் விலைவாசி உயரும் என்று கூறப்படுகிறது. ஏற்றுமதி மட்டுமின்றி மருந்து துறை, உணவு துறை, பாதுகாப்பு துறை என்று பல துறைகளில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் இதனால் கடுமையான இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications