ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் பயங்கர தற்கொலைப்படை தாக்குதல்... 26 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டின் ராணுவ படைகளுக்கும் எதிராக தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. ராணுவத்திற்கு எதிராகவும், பொதுமக்களை குறிவைத்தும் தலிபான் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கஸ்னி பகுதியில் ராணுவ தளம் உள்ளது. இன்று அந்த ராணுவ தளத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் சிக்கி 26 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கஸ்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மொத்தம் 26 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 17 பேர் காயம் அடைந்ததாகவும் கஸ்னி மருத்துவமனை இயக்குனர் பாஸ் முகமது ஹேமத் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications