ஈராக்கின் மிகப்பெரிய அணையைக் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்.... பிரதமரின் பிடி தளர்கிறது!
பாக்தாத்: குர்திஷ் படைகளைத் தோற்கடித்து ஈராக்கின் மிகப்பெரிய அணையான மொசூல் அணையை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரைப்பிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், தொடர்ந்து மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களையும் கைப்பற்றி வருகின்றனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தைப் பிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறிய அவர்கள், அந்த நகருக்கு 100 கி.மீ. தொலைவிலேயே படையை நிறுத்திக்கொண்டு விட்டனர்.
இலக்கு...
அதனைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள எண்ணெய் வயல்களுக்கு அருகேயுள்ள நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்கானது. சிரியா எல்லையில் உள்ள நகரங்கள் மீதும் அவர்கள் கண் வைத்தனர்.
ஜூமார் நகர்...
குர்தீஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஈராக் நகரான ஜூமார் நகரை பிடிப்பதற்கு திட்டமிட்டனர் தீவிரவாதிகள். குர்தீஷ் படையினரோடு நடந்த கடும் சண்டைக்குப் பிறகு கடந்த சனியன்று அந்நகரை அவர்கள் கைப்பற்றினர்.
முன்னேற்றிச் செல்கின்றனர்...
இதனால், அதன் சுற்றுப்புற கிராமங்களும் தீவிரவாதிகள் வசம் வந்து விட்டன. மேலும் ஜூமார் நகரையொட்டி அமைந்திருந்த எண்ணெய் வயலையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டனர். மேலும், இரண்டு நகர் பகுதிகளை அவர்கள் கைப்பற்றினர்.
மொசூல் அணை...
இந்நிலையில் ஈராக்கின் மிகப்பெரிய அணையான மொசூல் அணையையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மொசூல் அணையை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிக்கம்...
ஈராக்கில் படிப்படியாக தீவிரவாதிகளின் கை ஓங்கி வருவதால், அந்நாட்டு பிரதமர் நூரி அல் மாலிக்கின் பிடி தளர்ந்து வருகிறது.
அச்சம்..
இந்த அணையை தீவிரவாதிகள் வீழ்த்தி விட்டதால், அது நாட்டின் மின் வினியோக அமைப்பில் சேதாரத்தை ஏற்படுத்தி விடும். பெரிய வெள்ளத்துக்கும் வழிநடத்தி விடும் என அஞ்சப்படுகிறது.
விலகிக் கொண்டனர்.
இதற்கிடையே அணைப்பகுதியில் சண்டையில் ஈடுபடாமல் குர்திஷ் படையினர் விலகி கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications