ட்ரம்ப் மாடல்.. பிரேசிலில் வன்முறை! முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு செக் - உச்சநீதிமன்றம் அதிரடி
பிரேசிலியா: பிரேசிலில் புதியதாக பதவியேற்ற இடதுசாரி அதிபருக்கு எதிராக முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்கள் சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சம்பவதில் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்த விசாரணையில் ஜெய்ர் போல்சனாரோவையும் இணைக்க நீதிமன்றம் முடிவெடுத்திருக்கிறது.
சர்வதேச நாடுகளில் தேர்தல்கள் மூலம் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டாலும், பல வளர்ந்த நாடுகளே இந்த ஜனநாயக அமைப்பை சரியாக கடைப்பிடிக்காமல் இதனை எதிர்த்து வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ட்ரம் தோல்வியடைந் நிலையில், ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றினார். ஆனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பலர் ஜோ பைடனுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம் வன்முறையாக மாறி வெள்ளை மாளிகை வரை தாக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது பிரேசிலில் இதேபோல வன்முறை சம்பவம் கடந்த 8ம் தேதி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய வலதுசாரி அதிபரி ஜெய்ர் பொல்சனாரோ 49.1% வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பளார் லுலா டா சில்வா 50.9% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

வெற்றி
ஆனால் இந்த தோல்வியை பொல்சனாரோ ஏற்றுக்கொள்ளவில்லை. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் தான் தோல்வியடைந்திருப்பதாகவும் எனவே இந்த தோல்வியை தான் ஏற்கவில்லை என்றும் கூறி வந்தார். இந்நிலையில் இவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். மறுபுறம் அவர், புதிய அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அமெரிக்கா சென்றுவிட்டார். வெளிப்படையான விமர்சனம், பதவியேற்பு நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு என எல்லாமும் பொல்சனாரோவின் ஆதரவாளர்களிடையே கோபத்தை தூண்டியது. இதனையடுத்து அவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடிக்க தொடங்கியது.

போராட்டம்
கடந்த 8ம் தேதியன்று நாட்டின் தலைநகரான பிரேசிலியாவுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அரசு அலுவலகங்களை தாக்க தொடங்கியுள்ளனர். இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய அதிபர் லுலா அறிவித்திருந்தாலும் காவல்துறையினர் இந்த உத்தரவை பின்பற்றவில்லை. சில காவலர்கள் போராட்டக்காரர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது. இதனால் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகை என அனைத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். அவர்கள் கையில் கிடைத்தையெல்லாம் எடுத்து உடைத்தனர்.

வன்முறை
இந்த வன்முறை சம்பவம் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "பிரேசிலில் அரசுக்கு எதிராக கலவரம் மற்றும் நாச வேலைகள் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசிலிய அதிகாரிகளுக்கு எனது முழு ஆதரவு" என்று கூறியிருந்தார். அதேபோல அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன். ஜனநாயக நிகழ்வுகளுக்கு முழு ஆதரவளிக்கிறோம். மக்களின் விருப்பத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். லுலா தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

விசாரணை
இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணை தொடங்கியது. விசாரணையில் ஜெய்ர் பொல்சனாரோ குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கும் இந்த வன்முறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று கூறியுள்ளனர். ஆனால் இந்த வன்முறையில் பொல்சனாரோவை விசாரிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.












Click it and Unblock the Notifications