காஷ்மீரை பறிக்க நினைக்கும் பாக்.,கின் கனவு பலிக்காது - சுஷ்மா சுவராஜ் கடும் தாக்கு
நியூயார்க்: காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பறிக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு பலிக்காது என ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபையின் 71-வது பொதுச்சபை கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் 71வது பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

இந்த கூட்டத் தொடரில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், யோகா கலையை கவுரவிக்கும் வகையில் சர்வதேச யோகா தினத்தை ஐ.நா.சபையை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது. நாம் அனைவரும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க போராட வேண்டும். இதற்கு சில நாடுகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களை கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உலக வரைப்படத்தில் இடமில்லை.
இந்தியாவில் பதான் கோட் தாக்குதல், யூரி ராணுவ முகாம் தாக்குதல் உட்பட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா பல நிபந்தனைகளை விதிப்பதாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஐ.நா., சபையில் பேசி உள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார். அதை ஏற்க முடியாது. என்ன நிபந்தனைகள் என்பதை அவர்தான் கூற வேண்டும்.
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான். எப்பொழுதும் அப்படித்தான் இருக்கும். பயங்கரவாத கருத்துக்களை விதைப்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாத்திற்கு பகதூர் அலி ஒரு உதாரணம். கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் மற்றவர்கள் மீது கல்லெறியக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications