இந்தியாவில் சீனா ரூ.1.20 லட்சம் கோடி முதலீடு! சீன அதிபரை சந்தித்த பிறகு சுஷ்மா சுவராஜ் தகவல்
பெய்ஜிங்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீனாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். அவர், அதிபர் ஜி ஜிங்பிங் உடன், இரு நாடுகளின் பரஸ்பர நல்லுறவு திட்டங்கள் குறித்து பேசினார்.
இதன்பிறகு சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டு இந்தியா வந்து, பிரதமர் மோடியை சந்தித்த பின், இந்தியா - சீனா இடையேயான உறவு, புதிய நிலையை எட்டியுள்ளது என, ஜி ஜிங்பிங் தெரிவித்தார்.
இதன் காரணமாக, இந்தாண்டு, இந்தியா - சீனா நாடுகளின் பரஸ்பர வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, அவர் நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளும் மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்கள், செயல்வடிவம் பெற்று வருகின்றன. அவற்றில் ஒன்றான, புதிய பாதையில், சிக்கிம் வழியாக திபெத்தில் உள்ள கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை செல்லும் திட்டம், வரும் ஜூன் மாதம் செயல்பாட்டிற்கு வரும்.

இது, ஜி ஜிங்பிங் இந்தியா வந்தபோது, பிரதமர் மோடிக்கு அளித்த உறுதிமொழியாகும். இதன் மூலம் ஏராளமான இந்தியர்கள், மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளலாம். டெல்லி வந்த போது, பிரதமர், ஜனாதிபதி, இந்திய மக்கள் ஆகியோர் காட்டிய அன்பையும், விருந்தோம்பலையும், குறிப்பாக, மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு மேற்கொண்ட பயணமும், மறக்க முடியாதது என, ஜி ஜிங்பிங் தெரிவித்தார்.
சீனாவில், இம்மாத இறுதியில் துவங்கும் சந்திர ஆண்டு, ஆட்டின் மீது வருவதால், உருவாக்கம், கண்டுபிடிப்பு போன்ற துறைகள் செழித்து வளர்ச்சி காணும் என, எனக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில், இரு தொழிற் பூங்காக்கள் அமைத்தல், ரயில்வே துறையை நவீனமாக்குதல் உள்ளிட்ட திட்டங்களில், சீனா, 1.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இத்துடன், இதர ஒப்பந்தங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தேன். இவ்வாறு, சுஷ்மா கூறினார். சீன அதிபர் ஒருவர், வெளிநாட்டு அமைச்சர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது, இதுவே முதன்முறை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications