பல நாடுகளில் வெடிக்கும் மங்கி பாக்ஸ்.. "ஹை அலர்ட்!" இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. அலறும் உலக நாடுகள்
ஸ்வீடன்: நாம் கொரோனா பெருந்தொற்றில் இருந்தே இப்போது தான் மீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீண்டுள்ளோம். இதற்கிடையே இப்போது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மங்கி பாக்ஸ் பரவ தொடங்கியுள்ளது. முதல்முறையாக ஸ்வீடன் நாட்டில் மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் 3 பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதியாகியுள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப ஆண்டுகளாகவே உலகில் திடீர் திடீரென புது புது வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. கடைசியாக 2019ல் வெடித்த கொரோனா பெருந்தொற்று உலகை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

அதில் இருந்து நாம் மீண்டு வரவே சில ஆண்டுகள் நமக்குத் தேவைப்பட்டது. இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளை இன்னும் நம்மால் ஈடுகட்ட முடியவில்லை.
மங்கு பாக்ஸ்: ஒரு வழியாக நாம் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்ட நிலையில், அடுத்து இப்போது மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பரவுகிறது. ஏற்கனவே 2022இல் இது ஆப்பிரிக்காவில் சில நாடுகளுக்குப் பரவியது. இருப்பினும், அப்போது மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே இந்த வைரஸ் பாதிப்பு இப்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில் தான் இப்போது மங்கு பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பு உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு மங்கி பாக்ஸ் தொற்றுக்காக பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தொடர்ச்சியாக 2வது முறையாக பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.
விஸ்வரூபம் எடுக்குது: இந்த முறை பங்கி பாக்ஸின் ஆபத்து மிகப் பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏனென்றால் பொதுவாக மங்கி பாக்ஸ் ஆப்பிரிக்கக் கண்டத்திற்குள் மட்டுமே இருக்கும். திடீர் திடீரென அங்கே சில நாடுகளுக்குள் பரவும். ஆனால், பிறகு அது கட்டுப்படுத்தப்படும். சில சமயங்கள் மட்டுமே ஆப்பிரிக்காவுக்கு வெளியே வளரும் நாடுகள், ஆசிய நாடுகளில் பரவும். ஆனால், இப்போது முதல்முறையாக ஐரோப்பியாவில் பங்கி பாக்ஸ் பரவி இருக்கிறது.
ஐரோப்பாவுக்கு வெளியே: ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் இப்போது ஒருவருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் ஆபத்தான கிளேட் I வகை மங்கி பாக்ஸ் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்குச் சோதனை செய்யும் முயற்சியிலும் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
ஸ்வீடனுக்கு பிறகு இப்போது நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் 3 பேருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவருமே ஐக்கிய அமீரகத்தில் இருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன வகையான மங்கி பாக்ஸ் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
பேராபத்து: பொதுவாக மங்கி பாகஸ் லேசானது பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் சில சமயங்கள் மட்டும் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும். இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படும் போது காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். குறிப்பாகத் தோலில் சீழ் புண்களும் ஏற்படும். இது பொதுவாகவே உடலுறவு மூலமாகவே பரவும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications