பைபிள், தவ்ராவை எரிக்க அனுமதி.. கடைசியில் முஸ்லிம் இளைஞர் கொடுத்த டுவிஸ்ட் - உலகமே நெகிழ்ந்திருச்சு
ஸ்டாக்ஹோம்: சுவீடனில் பக்ரீத் பண்டிகை அன்று நீதிமன்ற அனுமதியுடன் குர்ஆன் எரிக்கப்பட்டதைபோல் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் மற்றும் யூதர்களின் புனித வேதமான தவ்ராவை எரிக்க அனுமதி பெற்ற முஸ்லிம் இளைஞர் இறுதியில் செய்த காரியம் அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது.
கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஐரோப்பிய நாடான சுவீடனில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். அப்போது மசூதி முன் வந்த நபர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை காலில் போட்டு மிதித்து தீயிட்டு எரித்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றே அவர் இவ்வாறு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அரபு நாடுகள் சுவீடனில் நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு கடும் கண்டங்களை பதிவு செய்தன.
இந்த நிலையில் சுவீடனில் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளையும், யூதர்களின் புனித நூலான் ஹீப்ரூ பைபிள் எனப்படும் தவ்ராவையும் ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக எரிக்க சுவீடனை சேர்ந்த அஹமது அல்லுஷ் என்ற 32 வயது காவல்துறையிடம் அனுமதி கேட்டார். இதற்கு சுவீடன் போலீசும் அனுமதி வழங்கியது.
இந்த தகவல் வெளியாகி சுவீடன் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிறிஸ்துவ மற்றும் யூத மக்கள் சுவீடன் போலீசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் புனித நூல்களை எரிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். யூதர்களின் பைபிளை எரிக்க அனுமதியளித்த சுவீடன் அரசை கண்டிப்பதாகவும், யூத மக்களின் புனித நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் காயப்படுத்தும் வெட்கம்கெட்ட செயல் இது என அவர் சாடி இருந்தார்.
அதேபோல் இஸ்ரேலுக்கான சுவீடன் தூதரும், இதை வெறுப்பின் செயல் என்று கண்டித்து இருந்தார். இந்த நிலையில் யூத பைபிள் மற்றும் கிறிஸ்துவ பைபிளுடன் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு முன்பாக அஹமது அல்லுஷ் என்ற இளைஞர் வருகை தந்தார்.
ஸ்வீடன் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும், இஸ்ரேலும் கொதித்துப்போய் இருந்த நிலையில் அவரது செயலை காண ஏராளமான ஊடகங்களும், பொதுமக்களும் அங்கு திரண்டு இருந்தனர். அப்போதுதான் அந்த இளைஞர் பெரிய டுவிஸ்ட் ஒன்றை அங்கு திரண்டு இருந்த அனைவருக்கும் வைத்தார்.
ஆம், தான் யூத மற்றும் கிறிஸ்துவ மக்களின் புனித வேதங்களை எரிப்போவதில்லை என அவர் அறிவித்தார். அங்கு திரண்டு இருந்த செய்தியாளர்களிடம் பேசிய அஹமது அல்லுஷ், "எந்த ஒரு புனித நூலையும் எரிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினேன். அதற்காகவே இவ்வாறு செய்தேன்.
நான் ஒரு முஸ்லீம், என்னால் புனித மற்றும் மத வேதங்களை எரிக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்துக்கும், இனக் குழுக்களை இழிவு படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. குர்ஆன் மற்றும் பிற மத நூல்களை எரிக்கும் செயலை வெறுக்கத்தக்க குற்றமாக கருத வேண்டும்.
இது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே யூத, கிறிஸ்துவ வேத நூல்களை எரிக்கும் செயலுக்கு போலீசாரிடம் அனுமதி பெற்றேன். அவற்றை எரிக்கும் நோக்கம் எனக்கு இல்லை." என்றார். அஹமது அல்லுஷின் இந்த செயலுக்கு உலகளவில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications