சிட்னி ஹோட்டல் முற்றுகை: உள்ளே இருப்பது ஒரே ஒரு தீவிரவாதிதான் – போலீசார் தகவல்
சிட்னி: சிட்னி ஹோட்டல் தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டுள்ள விவகாரத்தில் ஹோட்டலின் உள்ளே துப்பாக்கி ஏந்திய ஒரே ஒரு தீவிரவாதி மட்டுமே உள்ளே இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சிறைபிடிக்கப்பட்ட ஹோட்டல் ஜன்னல் வழியாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி என சந்தேகிக்கப்படும் கொடி ஒன்றும் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் உடனடியாக மூடப்பட்டது. மேலும் ஓபரா ஹவுஸ், சிட்னி பாலம் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் புகுந்துள்ள ஹோட்டலின் பெயர் லின்ட் சாக்கலேட் ஃகேப். தீவிரவாதிகள் உள்ளே புகுந்தபோது 20க்கும் மேற்பட்டோர் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிணையமாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் மூன்று பேர் தப்பி வந்துள்ள நிலையில், உள்ளே ஒரே ஒரு தீவிரவாதிதான் இருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவனிடம் பேச போலீஸ் தரப்பில் முயற்சிக்கப்பட்டு வருகிறது.அதேசமயம், தீவிரவாதியுடன் பேரம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தீவிரவாதியை உயிருடன் பிடித்தால்தான் அவனது உள்நோக்கம், அவனுக்குப் பின்னால் இருப்பது யார், ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகள் என்ன மாதிரியான திட்டத்துடன் உள்ளனர் என்ற விவரம் தெரிய வரும் என்பதால் போலீஸார் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications