சிட்னி தாக்குதல்: தீவிரவாதியின் மனநிலை குறித்து ஆஸ்திரேலியாவை பலமுறை எச்சரித்த ஈரான்
சிட்னி: மான் ஹாரூன் மோனிஸின் மனநிலை பற்றி ஈரான் ஆஸ்திரேலிய அதிகாரிகளை பலமுறை எச்சரித்துள்ளது என ஈரான் நாட்டு பத்திரிக்கையாளர் சாதிக் குர்பானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லின்ட் கபே ஹோட்டலுக்குள் நேற்று காலை புகுந்த தீவிரவாதி அங்கிருந்தவர்களை பிணையக் கைதியாக பிடித்துக் கொண்டார். பிணையக் கைதிகளில் 5 பேர் தப்பியோடி வந்தனர். ஹோட்டலுக்குள்ளும், நகரிலும் நான்கு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக தீவிரவாதி தெரிவித்தார். அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து 16 மணிநேரம் கழித்து ஆஸ்திரேலிய கமாண்டோக்கள் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 2 இந்தியர்கள் உள்பட 11 பேரை மீட்டனர். இந்த தாக்குதலில் 2 பிணையக் கைதிகள் மற்றும் மோனிஸ் பலியானார்.
இந்நிலையில் இது குறித்து ஈரானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சாதிக் குர்பானி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிட்னி முற்றுகை சம்பவத்திற்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தெஹ்ரான் மோனிஸின் மனநிலை பற்றி ஆஸ்திரேலிய அதிகாரிகளை பலமுறை எச்சரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பிறந்த மோனிஸ் 1996ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்துள்ளார். அவர் போரில் பலியான ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்பத்தாருக்கு துவேஷ கடிதங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications