சிரியாவில் இருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஜெர்மனி வந்த குடும்பம்
பெர்லின்: சிரியாவில் இருந்து அகதிகளாக கிளம்பிய ஒரு குடும்பம் பத்திரமாக ஜெர்மனிக்கு வந்துள்ளதில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகிறார்கள். நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் பெரும்பாலும் கடல் வழியாக செல்கின்றனர். கடலில் செல்கையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலர் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த லைத் மஜித் அல் அமிரிஜ் தனது மனைவி நதா, மகன்கள் முஸ்தபா, அகமது மற்றும் மகள்கள் தாஹா, நூர் ஆகியோருடன் நாட்டை விட்டு வெளியேறி துருக்கியை அடைந்தார். அங்கிருந்து அவர்கள் கிரேக்க தீவான காஸுக்கு கடந்த மாதம் 16ம் தேதி வந்தனர். கடல் வழியாக உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்த அவர்கள் கோஸ் தீவை அடைந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
அமிரிஜ் தனது இளைய மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். பின்னர் அவர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது குறித்து ஆங்கில ஆசிரியையான நதா அமிரிஜ் கூறுகையில்,
ஜெர்மனியில் எங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்வதுடன் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகள் உள்ளதால் இந்த நாட்டை தேர்வு செய்தோம். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மிகவும் அன்பானவர். அவர் எங்களுக்கு தாய் போன்றவர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications