தைவான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் திருவிழா 2024.. ஆட்டம் பாட்டம்.. அறுசுவை உணவுடன் கோலாகலம்
தைபே: தைவான் நாட்டில் 12ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்தினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் கடந்த 14 முதல் 17 வரை போகி தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

தைவான் தமிழ்ச்சங்கத்தின் 12 ஆம் ஆண்டு பொங்கல் விழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள தைவான் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உள்ளரங்கத்தில் சனிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் சுமார் 250 பேர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஆ.கு. பிரசன்னன் அவர்கள் வரவேற்று உரையாற்றினார். தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு அறிக்கையை துணைத் தலைவர் ரமேசு பரமசிவம் அவர்கள் வாசித்தார்கள்.
தைப்பொங்கல் விழாவினை தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி அவர்கள், இந்திய தைபே அசோசியேசனின் முதன்மை இயக்குனர் திருமிகு. மன்ஹர்சிங் லக்ஷ்மண்பாய் யாதவ் அவர்கள், டாடா கன்செல்டன்சியின் தைவான் நாட்டிற்கான தலைவர் கார்த்தி சேதுமாதவன் அவர்கள், தைவான் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டீன் பேராசிரியர் யிங்-ஜங் இவோன் யே அவர்கள், தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொது செயலாளர்கள் பேராசிரியர். ஜெங் ஷ்யோ லூ அவர்கள் மற்றும் ராபர்ட் சூ அவர்கள், கோ ஆக்ஷன் கார்பரேசன் தலைவர் முனைவர். டேவிட் சூ அவர்கள், மற்றும் பூ ஜென் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆல்பர்ட் தாங் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
தைவான் தமிழ்ச்சங்கம் வருடம் தோறும் நடத்தும் சிறுவர்களுக்கான ஓவிய கண்காட்சி காணொளியாக திரையிடப்பட்டது. ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட 11 சிறுவர், சிறுமியர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள் வழங்கப்படுத்தப்பட்டது.
கலை நிகழ்ச்சி: தைவான் தமிழ்ச்சங்கத்தின் கலைநிகழ்ச்சிகள் எப்பொழுதும் நம்முடைய பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக இருக்கும். அந்த வகையில் இத்தைப்பொங்கல் விழாவில் குச்சிப்புடி, பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு பார்ப்பவர் அனைவரையும் பரவசப்படுத்தியது.
சகோதரிகள் நிவ்ரிதி கல்யாணி சாரனு, அஷிதா சாரனு இருவரும் குச்சிப்புடி நடனமாடினார்கள். இருவரும் பள்ளி மாணவிகள், குச்சிப்புடி நடனத்தினை பல ஆண்டுகளாக கற்றுத் தேர்ந்தவர்கள். பொங்கல் விழாவில் கணபதி வந்தனம் நடனமாடி அசத்தினர். செல்வி. நிவ்ரிதி கல்யாணி சாரனு அவர்கள் ஆதிபராசக்தி மஹிஷாசூரமர்தினி நடனத்தை குச்சிப்புடி பாரம்பரிய நடன வடிவில் ஆடினார்கள்.
"என்னோடு நீ இருந்தால்" என்று தொடங்கும் பாடலை தாய் மற்றும் மகனின் உணர்வுப்பூர்வமான பிணைப்பின் பின்னணியில் திருமதி. சங்கரி பிரியா பிரகாஷ் மற்றும் பிரஸ்யூத் பிரகாஷ் அவர்கள் இருவரும் சேர்ந்து பாடினார்கள். பொங்கல் விழாவில் குழந்தைகளுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவருக்கும் பேராசிரியர் ஆல்பர்ட் தாங் அவர்கள் பரிசுபொருள் வழங்கினார்கள். ஜோயல் சக்ரியா ஜோசப் அவர்கள் கிட்டார் வாத்தியம் இசைத்து பாடல்களை பாடினார்.
இணைப்பு பாலம்: இந்த நிகழ்ச்சியில் தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். இந்த வகையில் தைவான் தமிழ்ச்சங்கமானது இந்திய மற்றும் தைவான் மக்களிடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது என்று சொல்வது மிகையாகாது.
நிகழ்ச்சிகள் அனைத்தும் திரு. கிரன் கேசவன், திருமதி. ரெனி அஜாய், திருமதி. வினோதினி மற்றும் செல்வி. அபிநயா ஆகியோரால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் சுமார் 250 பேருக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.
தைவான் தமிழ்ச்சங்க துணைப் பொது செயலாளர் திரு. சு.பொன் முகுந்தன் அவர்கள் மற்றும் பொருளாளர் திரு. தங்கராசு அரிச்சந்திரன் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்தார். நிறைவாக தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. ராஜமோகன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications