செல்பி மூலம் நம் உருவத்தின் "3டி சிலை"... ஜெர்மன் நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்
நியூயார்க்: செல்பி எடுத்துவிட்டு அதன் மூலமாக 3டி சிலையாக நம்முடைய உருவத்தினை செய்து கொள்ளும் ஜெர்மன் நிறுவனத்தின் முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய முறை மூலம் தயாரிக்கப்படும் 4 அங்குல உருவச் சிலைக்கு ரூபாய் 6 ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது.
3 டி பிரின்டர் மூலம் நாம் விரும்பும் பொருள்களை சிலை வடிவில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். இந்த தொழில் நுட்பத்துடன் ஒவ்வொருவரின் படத்தையும் 3 டி மூலம் செல்பியாக எடுத்து அதைக்கொண்டு அவரின் சிலையை செய்து கொடுக்க ஜெர்மன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

இதற்காக அந்த நிறுவனம், ஜப்பானில் டோக்கியோ, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ், மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் தங்கள் ஸ்டூடியோக்களை அமைக்கிறது.
செல்பி மூலம் தங்கள் உருவச் சிலையை செய்துகொள்ள விரும்புகிறவர்கள், இந்த நிலையத்துக்குச் சென்று, ஸ்டைலாக நின்றுகொண்டு தங்களை 3 டி கேமரா மூலம் படம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நிறுவனத்தினர், அந்த படத்தை 3 டி பிரின்டர் மூலம் உருவச் சிலையாக செய்து தருவார்கள்.
4 அங்குல உருவச்சிலை செய்ய ரூபாய் 6 ஆயிரமும், முழு உருவச் சிலை செய்ய ரூபாய் 45 லட்சத்து 75 ஆயிரம் வசூலிக்க இருப்பதாகவும் அந்த நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications