மசூத் வீட்டிற்கு உள்ளேயே நுழைந்த தாலிபான்.. கைப்பற்றப்பட்ட கொரில்லா ராஜ்ஜியம்?.. ஆப்கானில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பஞ்சசீர் மலை பகுதியை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அங்கு இருக்கும் கொரில்லா படையின் தலைவரான அஹமது மசூத் வீட்டை தாலிபான்கள் தெரிவித்துள்ளது. ஆனால் தாலிபான்கள் இன்னும் பஞ்சசீர் மலையை கைப்பற்றவில்லை என்று பஞ்சசீர் மலை கொரில்லா படைகள் தெரிவித்துள்ளது.

Recommended Video

    யார் கையில்Panjshir?..தொடரும் யுத்தம்.. | Panjshir Update | Afghanistan | Oneindia Tamil

    ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கும் மலை தொடரில் பஞ்சசீர் மலை பகுதி அமைந்துள்ளது. இங்கு 2 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். காபூலில் 90 மைல்கல்கள் தொலைவில் இந்த பஞ்சசீர் மலை பகுதி அமைந்துள்ளது. இங்கு இருக்கும் நார்தன் அலியன்ஸ் கொரில்லா படையினர் தாலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

    கடந்த மூன்று வாரமாக நார்தன் அலியன்ஸ் கொரில்லா படையினர் தாலிபான் படைக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர். கடந்த வாரம் நடந்த மோதலில் தாலிபான் படையினர் 600 பேரை கொன்றதாக கொரில்லா படையினர் தெரிவித்து இருந்தனர்.

    தோல்வி

    தோல்வி

    இந்த நிலையில்தான் இன்று பஞ்சசீர் மலை பகுதியை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளது. உள்ளே புகுந்த தாலிபான் அங்கு இருந்த கொரில்லா படையை வீழ்த்தி மொத்த மலையையும் கைப்பற்றி உள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு வாரமாக நடந்து வரும் மோதலில் தொடக்கத்தில் இங்கே கோரில்லை படையினர் முன்னிலை வகித்து இருந்தனர். அவர்களின் வித்தியாசமான தாக்குதல் ஸ்டைலால் அவர்களின் கைகளே ஓங்கி இருந்தது.

    ஓங்கிய கைகள்

    ஓங்கிய கைகள்

    முக்கியமாக பஞ்சசீர் மலை பகுதியில் கொரில்லா படையினர் மட்டுமின்றி தாலிபான்களிடம் இருந்து தப்பித்து வந்த ஆப்கான் படையினரும் இங்கே வந்து போராடி வருகிறார்கள். இதனால் தொடக்கத்தில் இங்கு கொரில்லா படையினரின் கை ஓங்கி இருந்தது. ஆனால் அதன்பின் தாலிபான்கள் தொடர்ந்து இங்கே தாக்குதல் நடத்தி வந்தனர். முக்கியமாக தாலிபான்களிடம் கடுமையான ஆயுதங்கள் இருக்கின்றன. ஹெலிகாப்டர், விமானங்கள், ராக்கெட்டுகள், குண்டுகள் ஆகியவை உள்ளன.

    படை

    படை

    படை ரீதியாக தாலிபான்கள் தற்போது வலிமையாக இருக்கிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தாலிபான்கள் இங்கே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. முக்கியமாக கடந்த மூன்று நாட்களாக தாலிபான்கள் இங்கு பல்வேறு பகுதிகளை கைப்பற்றியது. நேற்று ஆப்கான் துணை அதிபர் அம்ருல்லா சாலேவின் வீட்டை தாலிபான் படைகள் தாக்கி அழித்தது. ஆனால் இதில் சாலே உயிருக்கு எதுவும் ஆகவில்லை.

    கைப்பற்றியது

    கைப்பற்றியது

    சாலே தப்பித்த நிலையில் இன்னொரு பக்கம் நார்தன் அலியன்ஸ் குழுவின் தலைவர் அஹமது மசூத்தின் வீட்டையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது. இவரின் வீட்டிற்குள் இன்று தாலிபான்கள் புகுந்து உள்ளது. அதோடு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பஞ்சசீர் மலை பகுதியை மொத்தமாக கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் தாலிபான்கள் இன்னும் பஞ்சசீர் மலையை கைப்பற்றவில்லை பஞ்சசீர் மலை கொரில்லா படைகள் தெரிவித்துள்ளது.

    கைப்பற்றவில்லை

    கைப்பற்றவில்லை

    இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை. பஞ்சசீர் மலை இன்னும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நாங்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம், என்று கொரில்லா படையினர் தெரிவித்துள்ளனர்.

    பின்னணி

    பின்னணி

    ஆப்கானிஸ்தானில் 1990களுக்கு முன் சோவியத் படைகள் கம்யூனிச ஆட்சி நடத்தி வந்தது. இந்த கம்யூனிச ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் முஜாகிதீன் என்ற குடைக்கு கீழ் ஒன்றாக சேர்ந்து போராடி வந்தது. இதில் ஒரு பிரிவுதான் நார்தன் அலியன்ஸ். தாலிபான்களின் இந்த ஆட்சியை எதிர்த்த ஆப்கான் மக்கள்தான் தஜிக் என்ற பாரம்பரிய இஸ்லாமிய பிரிவை சேர்ந்த மக்கள். சன்னி பிரிவு இஸ்லாமை பின்பற்றும் தஜிக் பிரிவு மக்கள் மிதவாதிகள். பாரம்பரியமாக ஆப்கானிஸ்தானில் இருக்க கூடிய பூர்வ குடிகள். மூர்கத்தனமான மக்கள் கிடையாது. பெண் முன்னேற்றம் தொடங்கி சமத்துவம் வரை அனைத்தையும் பின்பற்ற கூடியவர்கள். தாலிபான்களின் மூர்த்தனமான ஆட்சியை இவர்கள் விரும்பவில்லை. தாலிபான்களை கடுமையாக எதிர்த்த இவர்கள் பஞ்ச்சீர் பகுதியில் உருவாக்கிய அமைப்புதான் Northern Alliance இதை United Islamic Front for the Salvation of Afghanistan என்றும் அழைப்பார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+