ஈரக்குலையே நடுங்குது.. நாட்டுப்புற பாடகரை தரதரவென தெருவில் இழுத்து போட்டு..சுட்டு கொன்ற தாலிபான்கள்
நாட்டுப்புற கலைஞரை சுட்டுக் கொன்றனர் தாலிபன்கள்
காபூல்: புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரை தாலிபன் தீவிரவாதிகள், நடுத்தெருவில் இழுத்து போட்டு சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இப்போது நாட்டை ஆப்கான்கள் கைப்பற்றிய நிலையில், அது அங்குள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், தாலிபன்களின் ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் என்ன பாடுபடப் போகின்றனரோ என்ற கலக்கமும், கவலையும்தான் உலக மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
பெண்கள் புர்கா அணியாமல் வெளியே வரக்கூடாது, ரத்த உறவு கொண்ட ஆண்களின் துணையுடன்தான் அவர்கள் தெருவில் நடமாட வேண்டும், பெண்கள் ஹீல்ஸ் அணியவே கூடாது, பொதுவிடங்களில் பெண்கள் சத்தமாக பேசக்கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்தனர்.

கெடுபிடிகள்
இப்போதும் அன்றைய காலகட்டத்தை போலவே, கட்டுப்பாடுகள் இருக்குமோ என்று பயந்து கொண்டு அந்தநாட்டு மக்கள் தப்பி செல்ல முயன்றுள்ளனர்... இப்படிப்பட்ட சூழலில், புதிய அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் தாலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்... சில முக்கிய துறைகளை நியமிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்வித்துறை
இப்படிப்பட்ட சூழலில், ஆப்கனின் கல்வித்துறையை தன் பொறுப்பில் கவனித்து வரும் சியார் கான் யாத் என்பவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. அதன்படி, கந்தஹாரில், டிவி மற்றும் ரேடியோவில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.. இது பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாடகர்கள்
எப்போதுமே பெண் பாடகர்கள், பெண் ஓவியர்கள் என்றால் தாலிபன்களுக்கு பிடிக்காதாம்.. அதனால்தான் அத்தகைய கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.. ஒரு நாட்டுப்புற கலைஞரை சுட்டு கொன்ற விவகாரம் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.. அந்தராபி என்ற பள்ளத்தாக்கில் உள்ள பக்லான் என்ற மாகாணத்தை சேர்ந்தவர் அந்த நாட்டுப்புற பாடகர்.. பெயர் ஃபவாத் அந்தராபி.. இவர் அந்த பகுதியில் ரொம்பவும் ஃபேமஸ் ஆனவராம்..

கொடூர கொலை
கிஷ்னபாத் என்ற கிராமத்தில் இவர் வாழ்ந்து வந்தார்.. காபூலிலிருந்து 250 கிமீ தூரத்தில் இந்த கிராமம் உள்ளது... சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள்ளேயே புகுந்த தாலிபான்கள், இவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து தெருவுக்குள் வீசினர்.. பிறகு அவரை தலையில் துப்பாக்கியாலேயே சுட்டு அங்கேயே கொலையும் செய்தனர்... ஆனால், இவரை ஏன் கொன்றார்கள் என்று காரணம் இதுவரை தெரியவில்லை.. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மட்டும் சொல்லி உள்ளனர்..
Recommended Video

பாடல்
அதாவது, 1996-2001-ல் தாலிபான்கள் போட்ட சட்டங்கள் மறுபடியும் அமலுக்கு வருகிறதாம்.. அதன்படி, யாருமே பொதுவெளியில் பாடக்கூடாதாம்.. அதாவது இஸ்லாமிய பாடல்களை மட்டும் பொதுவெளியில் பாடலாமாம்.. வேறு எந்த இசை நிகழ்ச்சியும் நடத்தக்கூடாதாம்.. பொதுவான பாடலையும் பாடக்கூடாதாம்.. இப்போது இவரை சுட்டுக் கொன்றுவிடவும், இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் வைரலாகி கொண்டிருக்கிறது... அத்துடன் அந்த நாட்டு மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications