புர்கா போடலையாம்.. துப்பாக்கியாலேயே சுட்ட தாலிபான்கள்.. ஏர்போர்ட்டில் கதறிய பெண்கள்
காபூல் ஏர்போர்ட்டில் சில பெண்கள் புர்கா அணியாததால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்
காபூல்: புர்கா அணியவில்லையாம்.. அதற்காக இஸ்லாமிய பெண்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் தாலிபான்கள்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது..இதில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட, முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்..
அமைதியான ஆட்சி தருவோம் என்று தாலிபான்கள் உறுதி தந்த நிலையிலும், பொதுமன்னிப்பு தரப்படும் என்று அறிவித்த பிறகும், பெண்களுக்கு அரசாங்கத்தில் பங்கு என்று அழைப்பு விடுத்த போதிலும், அதை ஆப்கானிய பெண்கள் ஏற்கவில்லை..

கூட்டம்
இதனால் தொடர்ந்து காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் குவிவதால், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியானது. பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டி தந்த அன்றே, பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட விழுந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை கூட்டின..

கண்டனம்
அப்படித்தான், காபூல் ஏர்போர்ட் அருகே சில பெண்கள் தலையில் புர்கா அணியாமல் பதற்றத்தில் ஓடி வந்து கொண்டிருந்தனர்.. அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்... இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது... உலகம் முழுவதும் இந்த சம்பவம் கண்டனத்தை பெற்றுள்ளது.

துப்பாக்கி சூடு
இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா என்பது முகத்தை முழுவதுமாக மூடக்கூடிய ஒரு டிரஸ் ஆகும்... அதாவது இஸ்லாமிய பெண்கள் தங்கள் தலை, முகத்தை வெளியே காட்டக்கூடாது என்பதற்காக இதை அணிவர்.. ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று கொண்ட தாலிபான்களோ, சில பெண்கள் புர்கா அணியாததால் அவர்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியது அதிர்ச்சி தந்துள்ளது..

பெண்கள்
ஒருவேளை, 1996களில் நடந்ததைபோலவே, இந்த முறையும் அந்த நாட்டு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்குமா? சுதந்திரங்கள் பறிக்கப்படுமா? என்ற பீதிநிறைந்த கேள்விகளும் எழுந்துள்ளன.. அன்றைய தினம் பெண்கள் வெளியில் வரும்போது கட்டாயமாக முழுபுர்கா அணிந்திருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது..

புர்கா
அதேபோல, எந்த பெண்ணும், ஆண் துணை இல்லாமல் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றார்கள்.. அப்படி தனியாக வந்த பெண்களை சுட்டுக் கொன்ற நிகழ்வும் உண்டு.. இப்போது நடப்பதை எல்லாம் பார்த்தால், மறுபடியும் பெண்கள் புர்கா அணிவது கட்டாயமாக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. தாலிபன் செய்தி தொடர்பாளர்கள் சிலர் இதுசம்பந்தமாக ஒரு பேட்டியை தந்திருந்தனர்..

அறிவிப்பு?
அதில், "ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு புர்கா கட்டாயமாக்கப்படாது... ஆனால் அதேசமயம், புர்காவிற்கு பதிலாக ஹிஜாப் அணிந்து கொள்ளலாம் அல்லது அபாயா அணிந்து கொள்ளலாம்" என்றனர்.. அதாவது தலை முதல் கால் வரை மறைக்கும் உடை புர்கா எனப்படும்.. தலையில் முடி, முகத்தை மறைத்துக்கெள்வது ஹிஜாப் எனப்படும்... தலைமுதல் கால்வரை மறைப்பது அபாயா எனப்படும்.. இதில் முகத்தை மட்டும் மறைக்காமல் வைத்திருக்கும்.. இதை ஏதாவது ஒன்றை மட்டும் அணிந்தால் போதும் என்கிறார்கள் தாலிபான்கள்.. ஆனால், இதுகுறித்து உறுதியான அறிவிப்பு எதுவும் வரவில்லை.. விரைவில் வரலாம் என்றும் சொல்கிறார்கள்..!












Click it and Unblock the Notifications