"பதிலடி கடுமையாக இருக்கும்.." பாகிஸ்தானை நேரடியாக எச்சரிக்கும் ஆப்கானிஸ்தான்! உச்சத்தில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

காபூல்: பாகிஸ்தான் தனது மண்ணில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகத் தாலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளது.. மேலும், தங்கள் மண்ணை ஆக்கிரமிக்க எந்தவொரு நாட்டையும் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ள தாலிபான்கள், அத்துமீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இப்போது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், இதனால் நிலைமை மோசமானது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானும் பதிலடி கொடுத்தது.

Taliban Warns Pakistan Expel ISIS Terrorists or Face More Strikes after Kabul strikes on Soldiers

ஆப்கானிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபீஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். பெஹ்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள டுராண்ட் கோடு அருகே இந்தப் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனது மண்ணில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்க பாகிஸ்தான் உதவுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எந்தவொரு தாக்குதலையும் சும்மா விடமாட்டோம் என பாகிஸ்தானுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும், "பாகிஸ்தான் மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.

திட்டவட்டம்

எங்கள் வான் மற்றும் நில எல்லைகளைப் பாதுகாக்க முழு உரிமை உண்டு. எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தானில் பதுங்கியுள்ள முக்கியமான ஐ.எஸ். உறுப்பினர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் அல்லது எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.. குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை (ஐஎஸ் தீவிரவாதிகள்) நாங்கள் எங்கள் பகுதியிலிருந்து அகற்றினோம். ஆனால் அவர்கள் இப்போது பஷ்துன்க்வாவில் (பாகிஸ்தானில்) பதுங்கியுள்ளனர்.

தீவிரவாதிகளுக்குப் பயிற்சி

இந்தத் தீவிரவாத குழுக்களில் இணைவோர் கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் வழியாகவே பயிற்சிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.. இங்கிருந்து தான் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்களுக்குத் திட்டம் போடுகிறார்கள். இவை அனைத்திற்கும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன" என முஜாஹித் தெரிவித்தார்.

தாலிபான் படைகளின் தாக்குதலை நியாயப்படுத்திய முஜாஹித், "ஆப்கன் மீதான தாக்குதலுக்குப் பதிலடி மட்டுமே நாங்கள் கொடுத்தோம். இந்த மோதல்களில் எங்கள் படைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். எங்கள் மண்ணை ஆக்கிரமிப்பவர்களுக்குக் கடும் பதிலடி கொடுக்கப்படும்" என்றார். மேலும், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் வேண்டுகோளின்படி வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

என்ன நடந்தது!

கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானில் மூன்று குண்டுவெடிப்புகள் நடந்தன. காபூலில் இரண்டு மற்றும் தென்கிழக்கு பக்திவாவில் ஒரு குண்டுவெடிப்புகள் நடந்தன. இதற்கு பாகிஸ்தானே காரணம் எனத் தாலிபான் குற்றம் சாட்டியதுடன், தங்கள் இறையாண்மை மீறப்பட்டதாகவும் தெரிவித்தது. எனினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் எதுவும் கூறவில்லை.. மாறாக, டிடிபி எனப்படும் பாகிஸ்தான் தாலிபான்களுக்கு அடைக்கலம் கொடுப்பதை ஆப்கானிஸ்தான் நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது.

இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கான் படைகள் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ஹெல்மண்ட், கந்தஹார், ஜாபுல், பக்டிகா, பக்டியா, கோஸ்ட், நங்கர்ஹார் மற்றும் குனார் ஆகிய மாகாணங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த மாகாணங்கள் அனைத்தும் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+