நாய்களுக்கு எங்க உடல்களை கொன்று வீசுவார்கள்.. தாலிபான்கள் இஸ்லாத்துக்கு கறை.. குமுறும் ஆப்கன் பெண்

தாலிபன்கள் குறித்து அந்நாட்டு பெண் பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

காபூல்: தாலிபான்கள் இஸ்லாத்துக்கு கறை என்றும் தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் வாழ்வது நரகத்துக்கு ஒப்பானது என்று ஆப்கன் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்...!

Recommended Video

    Khatera-வின் கண்ணீர் கதை | பெண்களின் உடல் நாய்களுக்கு இரை

    அமைதியான ஆட்சி தருவோம் என்று தாலிபான்கள் உறுதி தந்த நிலையிலும், பொதுமன்னிப்பு தரப்படும் என்று அறிவித்த பிறகும், பெண்களுக்கு அரசாங்கத்தில் பங்கு என்று அழைப்பு விடுத்த போதிலும், அதை ஆப்கானிய பெண்கள் இப்போது வரை ஏற்கவில்லை..

    தொடர்ந்து காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் குவிவதால், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியது மேலும் கலக்கத்தை தந்துவருகிறது..

     கொடுமை

    கொடுமை

    பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டி தந்த அன்றே, பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட விழுந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பையும் கூட்டியது. இந்நிலையில், தாலிபான்கள் எப்படி தங்களை நடத்துவார்கள் என்பது குறித்து அந்நாட்டு பெண் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ளது மேலும் கலக்கத்தை தந்துவருகிறது.

    கதேரா

    கதேரா

    அவர் பெயர் கதேரா.. இவர் ஒரு போலீஸ்காரர்.. தாலிபான்களின் தாக்குதலுக்கு நேரடியாக உள்ளானவர்.. கடந்த வருடம் இவரை பற்றின ஒரு செய்தியை படித்து, உலக நாடுகளே மிரண்டு போயின.. கடந்த அக்டோபர் மாதம் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு இவர் வந்து கொண்டிருந்தார். அப்போது தாலிபான்கள் கதேராவை வழிமறித்து, சரமாரி தாக்குதல் நடத்தினர்.. கத்தியை வைத்து கண்களை குத்திய தாலிபான் தீவிரவாதிகள், கதேராவின் கண்களையும் தோண்டி எடுத்தனர்... அப்போது இந்த கதேரா 2 மாசம் கர்ப்பமாக இருந்தார்.. மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, கடைசியில் டாக்டர்கள் கடுமையாக போராடி காப்பாற்றினார்கள்.

     தாலிபன்கள்

    தாலிபன்கள்

    இவர்தான் தற்போது பேட்டி தந்துள்ளார்.. தற்போது கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லியில் கணவர், கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் சொல்லும்போது, "தாலிபன்களுக்கு நாங்கள்தான் குறி.. எங்களை (கொடுமைப்படுத்துவார்கள்.. அவர்களின் தண்டனை கொடுமையாக இருக்கும்.. எங்க உடல்களை வீசிவிட்டு செல்வார்கள்... சிலசமயம் நாய்களுக்கு கூட உணவாக எங்கள் உடல்களை வீசுவார்கள்.. நான் அவங்ககிட்ட இருந்து பிழைத்தது பெரிய விஷயம்தான்...

     கொலை

    கொலை

    இவங்க பேச்சுக்கு கட்டுப்படவில்லையானால், பெண்கள் யாராக இருந்தாலும் நடுத்தெருவிலேயே கொலை செய்யவும் துணிவார்கள்.. தாலிபன்களின் ஆட்சியின் கீழ் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் வாழ்வது நரகத்துக்கு சமம். இந்த 20 வருடங்களில் நாங்கள் நிறைய விஷயத்தை உருவாக்கினோம்.. பல கனவுகளில் இருந்தோம்.. எல்லாம் போய்விட்டன.. மொத்தமாக முடிந்துவிட்டது..

     சிகிச்சை

    சிகிச்சை

    நாட்டை கைப்பற்றுவதற்கு முன்னாடியே, அரசாங்கத்தில் பணியாற்றும் பெண்கள், பெண் போலீஸ்கள் தாலிபான்களால் வேட்டையாடப்பட்டனர்.. தாலிபான்கள் இஸ்லாத்துக்கு கறை... ஆண் டாக்டர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தாலிபான்கள் அனுமதிப்பதில்லை.. பெண்கள் படிக்கவும் கூடாது, வேலைக்கும் போக அனுமதிக்க மாட்டார்கள்.. குழந்தைகள் பெற்றுக்கொள்ள மட்டும்தான் பெண்கள் என்று நினைக்கிறார்கள்.. ஆனால், மருத்துவ வசதி இல்லாமல் கூட எப்படி குழந்தை பெற்றுகொள்ள முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+