துபாயில் கவியரங்குடன் நடந்த தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
துபாய்: தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வாக வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர் சார்பில் நண்பர்களின் சந்திப்பு 17.04.2015 அன்று காலை 11 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இரட்டைக் கவியரங்கம் நடத்தப்பட்டது. முதல் கவிதை என்னும் தலைப்பில் திருமதி. உமா பாலாஜி தலைமையிலும், மறக்க முடியவில்லை என்னும் தலைப்பில் தமிழன் மு. யமுனாலிங்கம் தலைமையிலும் கவிஞர்கள் மீனாகுமாரி பத்மநாதன், ரமா மலர்வண்ணன், அஞ்சுகா, ஸ்வேதா கோபால், கிருத்திகா. கிருஷ்ணவேணி, சசிகுமார், அதிரை மெய்சா, காவிரிமைந்தன், ஜியாவுதீன், ஜெயராமன், ஆனந்தி, சபரிநாத், நாகப்பன், வெற்றிவேல் செழியன், ஹிதயத்துல்லா, முத்துப்பேட்டை ஷர்புதீன், நாகினி. கோவிந்தராஜன் ஆகியோர் தங்கள் கவிதைகளை வழங்கினார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை கவிதாயினி ரமா மலர்வண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியை கவிஞர் காவிரிமைந்தன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரதி காவலர் முனைவர் கே.ராமமூர்த்தி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ரமா மலர்வண்ணன்.

சிவ ஸ்டார் கோவிந்தராஜன், காவிரிமைந்தன், ஜியாவுதீன், லக்ஷ்மி நாராயணன், முதுவை ஹிதாயதுல்லா, குளச்சல் இப்ராகிம், திருமதி.மீனாகுமாரி பத்மநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications