'திருமணத்துக்கு தகுதியற்றவர்கள்'.. கால்பந்து வீராங்கனைகளை மிகவும் அருவருப்பாக பேசிய பெண் ஜனாதிபதி!
ஹோபர்ட்: கால்பந்து வீராங்கனைகள் குறித்து தான்சானியா பெண் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன், அருவருப்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது,. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
தான்சானியா நாட்டின் முதல் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹாசன், கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தேசிய ஆண்கள் அணி வெற்றி பெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அருவருப்பான கருத்து
கால்பந்து வீராங்கனைகளுக்கு ஆண்களை போன்று தட்டையாக மார்பகங்கள் உள்ளது. அவர்கள் பெண்கள் அல்ல; ஆண்கள் என்று நீங்கள் சில நேரங்களில் நினைக்கலாம். ஆனால் அவர்களின் முகங்களைப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படலாம். ஏனென்றால் நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் கவர்ச்சி மற்றும் நல்ல மனது கொண்ட பெண்களை தான் நீங்கள் விரும்புவீர்கள்.

மிகவும் வருத்தம்
நீங்கள் விரும்பும் குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை விரும்புவீர்கள். பெண்கள் கால்பந்து வீராங்கனைகளுக்கு அந்த குணங்கள் மறைந்துவிட்டன. கால்பந்து வீராங்கனைகள் வெற்றி பெற்று நாட்டிற்கு கோப்பைகளை கொண்டு வரும்போது ஒரு தேசமாக நமக்கு பெருமையாக இருக்கிறது. ஆனால் அவர்களது எதிர்காலத்தை பார்க்கும் பொழுது மன்னிக்கவும் வருத்தமாக இருக்கிறது.

ஆணா? பெண்ணா?
ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் என்ன வாழ்க்கையை வாழ்வார்கள்? திருமண வாழ்க்கை அவர்களுக்கு ஒரு கனவு போன்றது. ஏனென்றால் உங்களில் ஒருவர் அவர்களை மனைவியாக வீட்டிற்கு அழைத்து சென்றாலும் அவர் ஆணா? பெண்ணா? என்று பெற்றோர்கள் உங்களிடம் கேள்வி எழுப்புவார்கள் என்று அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் தெரிவித்து இருந்தார்.

நெட்டிசன்கள் கண்டனம்
பெண் அதிபரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண்ணாக இருந்து கொண்டே பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு கருத்து கூறுவது எந்த மாதிரியான மனநிலை? என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். சாமியா சுலுஹு ஹாசன் தான்சானியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற விரும்புகிறார். இவருக்கும் தாலிபான்களுக்கும் வித்தியாசம் இல்லை. எங்களுடைய பெண்களின் உரிமைகள் எங்கே? என்று ஒரு சில நெட்டிசன்கள் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications