ஆசிரியர்களின் டார்ச்சரால் பள்ளி மாணவனுக்கு பக்க வாதம்.. பாகிஸ்தானில் கொடூரம்
பாகிஸ்தானில் ஆசிரியரின் டார்ச்சரால் பள்ளி மாணவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் ஆசிரியர் கொடுத்த டார்ச்சரால் 14 வயதுடைய பள்ளி மாணவன் மயக்க நிலைக்கு தள்ளப்பட்ட அவலம் நடந்துள்ளது.
இத்தகவலை பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ளது. முகமது அகமத் என்ற அந்த மாணவனை பள்ளி ஆசிரியர் கழுத்தை நெரித்ததால் பேச்சுத் திறன் இழந்து பக்கவாத நோயினால் தாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது,

இதனால், அந்த மாணவனின் மூட்டுக்களில் எந்த விதமான அசைவும் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது அகமத்தின் தந்தை குலாம் அகமதுவும் ஒரு ஆசிரியர் எனக் தெரியவந்துள்ளது. தனது மகனின் இந்த நிலைக்கு சில ஆசிரியர்களே காரணம் என்றும், இந்த சம்வம் 4 மாதங்களுக்கு முன்பாகவே நடந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், எனது மகனின் பள்ளி நிர்வாகத்தினர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வலிப்பு நோயினால் முகமது அகமத் பாதிக்கப்பட்டதாக கூறினர். உடனடியாக பள்ளிக்கு சென்று பார்த்தபோது எனது மகனின் முகம், மார்புப் பகுதி, தலை, மூட்டுக்களின் முன்பின் பகுதிகள் காயங்களுடன் கட்டுப் போடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மாணவன் கடுமையாக தாக்கப்பட்டதாலேயே இந்த நிலைக்கு ஆளானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா கொண்டு சென்றாலே அந்த மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் அளவிற்கு தம்மிடம் வசதி இல்லை என்று செய்வதறியாது குலாம் அகமது தவித்து வருகிறார். மேலும், ஆறு மகள்களுக்கு தந்தையான குலாம் அனைத்து சேமிப்பினையும் முகமதுவின் மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டதாக கூறி மன வேதனையில் இருந்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications