ஸ்பெயின் நாட்டில் தீவிரவாத தாக்குதல்- மக்கள் கூட்டத்தில் வேன் பாய்ந்து ஒருவர் பலி: 32 பேர் படுகாயம்
ஸ்பெயின் நாட்டில் தீவிரவாத தாக்குதலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். 32 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் மக்கள் கூட்டத்திற்குள் வேன் ஒன்று பாய்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் முக்கிய சுற்றுலாத் தலம் லாஸ் ராம்பலாஸ். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், அந்நாட்டு மக்களும் குவிந்திருப்பது வாடிக்கை. மாலை நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்ட நிலையில், திடீரென கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது.

கண்மண் தெரியாமல் உள்ளே நுழைந்த வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, லாஸ் ராம்பலாஸ் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வண்ணம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல்தான் என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications