ஆ ..ஊ.. அயய்யோ வூ....ஒரே நேரத்தில் ஆற்றில் குதித்த 2 காதலிகள்.. ஒருவரை மட்டும் மீட்ட சீன வாலிபர்!
பெய்ஜிங்: சினிமாவில் பார்த்திருப்போம், ஏன் டிவி சீரியலில் கூட பார்த்திருப்போம்.... ஆனால் நிஜத்தில் பார்த்திருக்கிறீர்களா.. பார்த்திருக்கிறீர்களா என்று நரம்பு புடைக்க கத்திக் கேட்கும் வகையில் உள்ளது இந்த செய்தி. காரணம், மேட்டர் அப்படி.
சீனாவில் யாரை உண்மையாக காதலிக்கிறாய் என்று கேட்டு ஒரு காதலனை பயங்கரமாக சோதித்து விட்டனர் இரு பெண்கள். இந்த சிக்கல் யாருக்குமே வரக் கூடாது. அப்படிப்பட்ட அபாயகரமான சிக்கல் இது.

சீனாவைச் சேர்ந்தவர் வூ ஸியா 21 வயதாகும். இவரது காதலியின் பெயர் ஜுன் தாங். இவருக்கு 20 வயதாகிறது. இவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த வூ, திடீரென 22 வயதான ரோங் டாசோ என்ற பெண்ணைப் பார்த்து அவர் மீது மையல் கொண்டு ஆள் மாறினார்.
இதனால் ஜூன் தாங்கை அவர் புறக்கணித்து வந்தார். 3 மாதமாக இந்த லடாய் நீடித்து வந்தது. இதையடுத்து 3 பேரும் நேரில் உட்கார்ந்து பேசி பிரச்சினையை சரி செய்ய முடிவெடுத்தார் வூ. அதன்படி 3 பேரும் தனிமையில் சந்தித்தனர். ஆனால் அவர்கள் சந்தித்த இடத்தில் நடந்ததுதான் பெரும் விபரீதமாக போய் விட்டது.
அநத் இடம் கிழக்கு சீனாவில் உள்ள நிங்போ என்ற அழகான இயற்கைச் சூழலுடன் கூடிய பகுதியாகும். அந்த இடத்தில் இரு காதலிகளுக்கும் இடையே பெரும் சண்டை மூண்டது
இந்த சண்டையால் கோபமடைந்த புதிய காதலி தடாரென அருகில் இருந்த ஆற்றில் குதித்து விட்டார். குதிப்பதற்கு முன்பு உனக்கு என் மீது உண்மையிலேயே அன்பு இருந்தால் என்னைக் காப்பாற்று என்று வேறு கூறி விட்டு குதித்து விட்டார்.
விடுவாரா பழைய காதலி.. அவரும், ஆற்றில் குதித்தார். அவரும் அதேபோல டயலாக் விடவே, பெரும் தர்மசங்கடமாகி விட்டது வூ-வுக்கு. ஆற்றில் குதித்த இரு பெண்களும் உயிருக்காக போராடத் தொடங்கினர். காப்பாற்ற வருமாறு வூவை அழைத்துக் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து ஆற்றில் குதித்த வூ, தனது பழைய காதலியை மட்டும் காப்பாற்றி மீட்டு கொண்டு வந்து மருத்துவமனைக்கு விரைந்தார். போகிற வழியில் தனது அண்ணனுக்குப் போன் செய்து, புதிய காதலியை காப்பாற்றுமாறு கூறினார். அண்ணனும் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டு கொண்டு வந்தார்.
இப்போது இந்தக் கதைதான் சீனாவில் வைரல் ஆகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications