Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது ஏன்! தாய்லாந்து கம்போடியா மோதலில்.. இந்து கோயில்கள் குறிவைக்கப்படுவது ஏன்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்து கம்போடியா இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் உச்சத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கம்போடியாவில் இருக்கும் விஷ்ணு சிலையை தாய்லாந்து இடித்து அகற்றியது பெரும் சர்ச்சையானது. தாய்லாந்து, கம்போடியா இடையே உண்மையில் என்ன பிரச்சனை.. அதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே இந்த மோதல் 100 ஆண்டுகளுக்கு மேலாகவே தொடர்கிறது. அங்கு இந்து கோயில்கள் அமைந்துள்ள பிரியா விஹார் (Preah Vihear) பகுதி தான் மோதலின் மையமாக இருக்கிறது. தாய்லாந்தில் "பிரே விஹார்" என அறியப்படும் இக்கோயில், 11ஆம் நூற்றாண்டில் கெமர் பேரரசு உச்சத்தில் இருந்தபோது கட்டப்பட்டது.

Thailand- Cambodia Border Clash What is the reason behind clash and why Vishnu statue destroyed

கெமர் பேரசு

இந்த கெமர் பேரசு தான் உலகின் மிகப் பெரிய கோயிலான அங்கோர் வாட்டை கட்டியது. மேலும், இன்றைய தாய்லாந்தின் பெரும்பகுதியை ஆண்டனர். சிவபெருமானை முதன்மை தெய்வமாகக் கொண்ட பிரியா விஹாரின் கட்டமைப்புகள், 800 மீட்டர் நீளமுள்ள நடைபாதைகள் மற்றும் படிக்கட்டுகளால் இணைக்கப்பட்டு இருந்தது. அதன் சிற்பக்கலைக்காகப் புகழ்பெற்றவை.

கெமர் பேரரசு வீழ்ச்சி கண்ட பிறகு, 1790களில் இந்த கோயில் தாய்லாந்தின் சியாம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1860கள் வரை இதே நிலை தான் தொடர்ந்தது. அதன் பிறகே கோயிலைப் பாதுகாக்க உதவ வேண்டும் எனப் பிரெஞ்சு படைகள் பாதுகாப்பைக் கம்போடிய மன்னர் நோரோடோம் கோரினார். இதையடுத்து கம்போடியாவின் இதர பகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வந்த தாய்லாந்தின் சியோம், பிரே விஹார் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் உரிமை கோரினார்.

சிக்கல் ஆரம்பம்

அதன் பிறகு ஆசியாவின் பெரும் பகுதியை பிரெஞ்ச் படைகள் கைப்பற்றியபோது சியாம் மற்றும் பிரெஞ்சு அரசுகள் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் கோவில் பெரும்பகுதியை தாய்லாந்தில் சேர்க்க ஒப்புக்கொண்டன. இருப்பினும், ஒப்பந்தத்தில் தெளிவு இருக்கவில்லை. தாய்லாந்து கம்போடியா இரு நாடுகளின் எல்லையைத் துல்லியமாக வரையறுக்க ஒரு கூட்டு ஆணையம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

1907இல் பிரெஞ்சு நில அளவைத் துறை ஆய்வு செய்தது. அதன் முடிவில் பிரியா விஹார் முழுவதும் கம்போடிய உடன் சேர்க்கப்பட்டது. அதன் பிறகே கம்போடியாவின் உரிமை கோரல்கள் வலுத்தது. இருப்பினும், அதை தாய்லாந்தின் சியாம் எதிர்த்தது. இதனால் 1907 முதல் 1953 வரை, இந்தக் கோயில் கட்டுப்பாடு தாய்லாந்து, பிரெஞ்சு, கம்போடியா என மாறி மாறி வந்தது. இந்தச் சூழலில் தான் 1954 இல் படைகளை அனுப்பி, பிரெஞ்சு வீரர்களை அகற்றிவிட்டு, தாய்லாந்து கொடி நிறுவப்பட்டது.. சுமார் 5 ஆண்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகும் இதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து கம்போடியா 1959இல் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

சர்வதேச நீதிமன்றம்

சுமார் 3 ஆண்டுகள் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அதில் இந்த கோயில் மீது கம்போடியாவுக்கு இறையாண்மை உண்டு என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், கோயிலின் நுழைவாயில் தாய்லாந்து எல்லையை நோக்கியே உள்ளதால் அங்கிருந்து எளிதாக அணுகக்கூடியதாக உள்ளது. இந்த தீர்ப்பு வந்தவுடனேயே தாய்லாந்து ராணுவம் விரட்டப்பட்டு, கம்போடியப் படைகள் உள்ளே வந்தது.

இப்படி பதற்றமான சூழல் நிலவி வந்ததால்.. பிரியா விஹார் 1990களின் பிற்பகுதி வரை மூடப்பட்டது. 2008இல் யுனெஸ்கோ பட்டியலில் இந்த கோயில் இணைக்கப்பட்டது. அப்போது தான் இதற்குச் சர்வதேச கவனம் கிடைத்தது. இருப்பினும், இது சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் யுனெஸ்கோ செயலுக்கு தாய்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தச் சூழலில் தான் கடந்த மே மாதம் இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. அந்த சிறு மோதலே மெல்லப் பெரிதாகி, இப்போது போர் வெடிக்கும் சூழலில் வந்து நிற்கிறது.

சமீபத்திய மோதல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து இடித்து அகற்றியது. இது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக தாய்லாந்து விளக்கமளித்தது. அதாவது அந்த கோயில் அமைந்த இடம் கோயிலோ வழிபாட்டுத் தளமோ இல்லை என்றும் அரசியல் செய்யவே கம்போடியா அங்கு அந்தச் சிலையை வைத்திருந்ததாக தாய்லாந்து தெரிவித்தது. இதன் காரணமாகவே அந்தச் சிலை அகற்றப்பட்டதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+