சிவன் கோவில் யாருக்கு? தாய்லாந்து - கம்போடியா போரின் பின்னணி.. படைகள் குவிப்பு - தொடரும் பதற்றம்
பாங்காக்: தென்கிழக்கு ஆசிய நாடுகளாக உள்ள தாய்லாந்து - கம்போடியா இடையே போர் வெடித்துள்ளது. கம்போடியா மீது தாய்லாந்து போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் மூலமாக குண்டுகளை வீசி உள்ளது. அதேபோல் கம்போடியாவும் தாய்லாந்து மீது அட்டாக் செய்துள்ளது. இருநாடுகளின் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்நிலையில் தான் இருநாடுகளின் மோதலுக்கு முக்கிய காரணமாக எல்லையில் உள்ள சிவன் கோவில் தான். அந்த சிவன் கோவிலுக்காக இருநாடுகளும் அடித்து கொள்வது ஏன்? என்பது பற்றிய முக்கிய வரலாற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம், சிவபெருமானை முக்கிய தெய்வமாகக் கொண்ட பழமையான இந்து கோயில் ஆகும்.

இந்த 2 நாடுகளும் தென்கிழக்கு ஆசிய நாடுகளாகும். மியான்மருக்கு அடுத்ததாக இந்த நாடுகள் அமைந்துள்ளன. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் நம் நாட்டில் இருந்து 2,920 கிலோமீட்டர் தொலைவில் தாய்லாந்து - கம்போடியா நாடுகள் அமைந்துள்ளன. தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகியவை அண்டை நாடுகளாகும்.
இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. மொத்தம் 800 கிலோமீட்டர் தொலைவுக்கு இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மகாணமும் இருநாடுளின் எல்லையில் அமைந்துள்ளது. அண்டை நாடுகள் என்றாலே பிரச்சனை இருக்கத்தானே செய்யும். அந்த வரிசையில் தாய்லாந்து மற்றும் கம்போடியாவும் விதிவிலக்கல்ல. இருநாடுகள் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த பிரச்சனை தான் கடந்த சில நாட்களாக மாறிய நிலையில் இப்போது போராக உருமாறி உள்ளது. நேற்றைய தினம் திடீரென்று தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள் எல்லையில் மோதி கொண்டனர். மாற்றிமாற்றி துப்பாக்கிச்சூடு நடத்தினர். தாய்லாந்து சார்பில் கம்போடியா மீது தாய்லாந்து எஃப் 16 ரக போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியது. கம்போடியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாய்லாந்து - கம்போடியா இடையே நடந்த இந்த மோதல் காரணமாக மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர். இதில் 2 பேர் ராணுவ வீரர்கள். மற்ற 14 பேரும் பொதுமக்கள் ஆவார்கள். மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த. இந்த கோவில் விஷயத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இருநாடுகள் இடையேயான பிரச்சனை பெரிதாக தொடங்கியது. இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி உள்ளன. எல்லையோரத்தில் உள்ள 1 லட்சம் மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தாய்லாந்து தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை கம்போடியாவும், கம்போடியாவில் உள்ள தாய்லாந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் தொடர்ந்து வருகிறது.
இப்படி தாய்லாந்து - கம்போடியா மோதிக்கொள்ள முக்கிய காரணம் இருநாடுகள் இடையே நிலவும் எல்லை பிரச்சனை தான். அதாவது தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மாகாணமும் இருநாடுளின் எல்லையில் அமைந்துள்ளது. தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம், சிவபெருமானை முக்கிய தெய்வமாகக் கொண்ட பழமையான இந்து கோயில் ஆகும். அதாவது இருநாடுகளின் எல்லையாக டாங்ரேக் மலை அமைந்துள்ளது.
இங்குள்ள பாங் நாங் கண்ணா என்ற இடத்தில் பிரசாத் தா முயென் தோம் என்ற சிவன் கோவில் உள்ளது. அதேபோல் புத்த மதத்துடன் தொடர்புடைய முக்கிய பிரசாத் தா முயென் மற்றும் பிரசாத் தா முயென் டிஓடி என்ற 2 கட்டடங்கள் உள்ளன. இது தொல்பொருள் ஆய்வு தளமாக உள்ளது. இது தான் இருநாடுகள் இடையேயான மோதலுக்கு முக்கிய இடமாகும்.
இதில் பிரசாத் தா முயென் என்பது புத்த மத தளமாக கருதப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கான தர்மசாலையாக கட்டப்பட்டது. இதனை கட்டியவர் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த 7 ம் ஜெயவர்மன் எனும் மன்னர் ஆவார். சிவப்பு நிற களிமண்ணால் கோபுரமாக இது கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து 340 மீட்டர் தொலைவில் பிரசாத் தா முயன் டோட்(TOT) உள்ளது. இது உள்ளூர் மக்களுக்கான மருத்துவமனையாக செயல்பட்டது.
இந்த 2 கட்டத்துக்கு முன்பாகவே இங்கு பிரசாத் தா முயென் தோம் என்ற சிவன் கோவில் உள்ளது. இது 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. மன்னர் இரண்டாம் உதயாதித்யவர்மனால் இது கட்டப்பட்டது. இங்கு தெய்வமாக சிவபெருமான் உள்ளார். கோவிலில் சிவலிங்கம் இருக்கிறது. இத இந்த சிவபெருமான் கோவில் மற்றும் புத்த மதத்துடன் தொடர்புடயை 2 கட்டங்கள் அருகருகே அமைந்துள்ளது. இது யாருக்கு சொந்தம் என்பதில் தான் கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே மோதல் ஏற்பட்டு போர் வெடித்துள்ளது. இந்த கோவிலை வைத்து பிரச்சனை வெடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை இந்த பிரச்சனை வந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications