வெடித்தது புதிய போர்.. தாய்லாந்து - கம்போடியாவில் 1 லட்சம் பேர் வெளியேற்றம்! குண்டுவீச்சு -பதற்றம்
பாங்காக்: எல்லையில் உள்ள சிவன் கோவில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட பிரச்சனை இருந்து வந்தது. இந்த பிரச்சனை இருநாடுகள் இடையேயான மோதலாக தற்போது உருவாகி உள்ளது. நேற்று இருநாடுகளின் ராணுவ வீரர்களும் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கம்போடியா மீது தாய்லாந்து போர் விமானங்கள் மூலமும், பீரங்கி பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ள நிலையில் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இருந்து வுருகின்றன. இருநாடுகளும் அண்டை நாடுகளாகும். இந்த நாடுகள் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மகாணமும் இருநாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.

தாய்லாந்தின் சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா முயென் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது இந்த. இந்த கோவில் விஷயத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இருநாடுகள் இடையேயான பிரச்சனை பெரிதாக தொடங்கியது.
இதற்கிடையே தான் நேற்று முன்தினம் கன்னிவெடி வெடித்ததில் தாய்லாந்தை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அதன்பிறகு டென்ஷன் அதிகரித்தது. நேற்று திடீரென்று இருநாடுகள் இடையே மோதல் வலுத்தது. தாய்லாந்து சார்பில் எல்லையில் எஃப் 16 ரக போர் விமானங்கள் குவிக்கப்பட்டது. இருநாடுகள் இடையே கடும் மோதல் நடந்தது. இருநாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களும் மாறி மாறி தாக்கி கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த மோதலின்போது இருநாடுகளும் பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தினர். ராக்கெட் குண்டுகளை மாறி மாறி வீசி கொண்டனர். கம்போடியா மீது தாய்லாந்து எஃப் 16 ரக போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியது. கம்போடியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாய்லாந்து - கம்போடியா இடையே நடந்த இந்த மோதல் காரணமாக மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர். இதில் 2 பேர் ராணுவ வீரர்கள். மற்ற 14 பேரும் பொதுமக்கள் ஆவார்கள். மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி உள்ளன. அதுமட்டுமின்றி தாய்லாந்து தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை கம்போடியாவும், கம்போடியாவில் உள்ள தாய்லாந்து தூதரக அதிகாரிகள், மக்களை வெளியேற்ற இருநாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருநாடுகளும் மோதலை கைவிட வேண்டும் ஐநா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதற்றம் காரணமாக தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் தனது எல்லையில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற தொடங்கி உள்ளது. இருநாடுகளும் 800 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. கடந்த 2008, 2011 காலங்களில் இதுபோன்ற மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது மோதல் வலுத்துள்ளதால் எல்லையோர மக்களை இருநாடுகளும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கின்றன.
இதுதொடர்பாக தாய்லாந்து உள்விவகாரத்துறை அமைச்சகம் சார்பில், ‛‛4 எல்லைகளில் இருந்து ஒரு லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 300 தற்காலிக முகாம்களில் தங்க வைக்க்பபட்டுள்ளனர்'' என கூறியுள்ளது. அதேபோல் கம்போடியாவை எடுத்து கொண்டால் எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இவர்கள் சொந்த டிராக்டரில் கூட்டம் கூட்டமாக அரசு ஏற்படுத்தி உள்ள முகாம்களுக்கு செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications