For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாய்லாந்து.. அவனவன் உயிரை காப்பாற்ற போராடிக்கொண்டிருந்தா, சில பத்திரிகையாளர்கள் செய்த வேலையை பாருங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தாய்லாந்து குகை..சிறுவர்கள் சிக்கியது முதல் மீண்டது வரை!- வீடியோ

    பேங்காங்: தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கி 12 கால்பந்து விளையாட்டு சிறுவர்கள் மற்றும் அவர்கள் பயிற்சியாளர் ஆகியோர் 17 நாட்களாக கடும் அவதிகளை சந்தித்தனர்.

    சர்வதேச நாடுகளின் உதவியோடு படிப்படியாக 13 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த குகை கடந்த பல நாட்களாக சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

    Thailand cave rescue: Foreign journalist has been detained for flying a drone

    இதனால் பல நாட்டு பத்திரிகையாளர்களும் குகை அருகே குவிந்திருந்தனர். மீட்பு நடவடிக்கைகளை லைவாக படம் பிடித்து காட்டினர். செய்திகளை வழங்கினர். இதனால் மக்களுக்கு உடனுக்குடன் செய்தி நிலை தெரிந்தது.

    ஆனால், சில பத்திரிகையாளர்கள் அத்துமீறி நடந்து கொண்டனர். ட்ரோன் எனப்படும் சிறுவகை குட்டி விமானத்தை பறக்கவிட்டு அந்த பகுதியை ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் படம் பிடித்துள்ளார். அவர் மீட்பு நடவடிக்கை மற்றும் அந்த சூழல் குறித்து காட்சிப்படுத்த படம் எடுத்திருந்தாலும், அனுமதியின்றி இவ்வாறு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    சில பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு படையினர், போலீசார் நடுவேயான வயர்லெஸ் உரையாடலை காது கொடுத்து கேட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. பிரத்யேக செய்தி தர வேண்டும் என்ற வேட்கையிருந்திருப்பினும், இது உளவு பார்ப்பதற்கு சமமானது என்று தாய்லாந்து பாதுகாப்பு படையினர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

    English summary
    A foreign journalist has been detained for flying a drone near the cave entrance area, according to Thai media. On Monday the authorities complained that a journalist flew a drone above the operation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X