
"வெல்டிங் கட்டர் எல்லாம் வைத்து.!" பெரிதாக்க ஆணுறுப்பில் வளையம் அணிந்த இளைஞர்! கைவிரித்த டாக்டர்கள்
பாங்காக்: தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பைப் பெரிதாக்க எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்து உள்ளது. மருத்துவர்களே இதைக் கண்டு மிரண்டுவிட்டனராம்.
இந்தக் காலத்தில் எல்லாம் இளைஞர்களுக்கு மிக எளிதாகத் தவறான தகவல்கள் இணையதளங்கள் மூலம் கிடைக்கிறது. அதில் எது உண்மை, எது பொய் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
குறிப்பாக பாலியல் சார்ந்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றனர். இதை உண்மை என்று இளைஞர்கள் நம்பும்போது, அது மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கேன்சர் மாத்திரை + வாட்டர் + ஊசி.. அதீத போதையை அனுபவிக்க நினைத்த இளைஞர்.. அடுத்து நடந்த கொடூரம்!

தாய்லாந்து
அப்படித்தான் தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்குச் சம்பவம் நடந்து உள்ளது. தனது ஆணுறுப்பைப் பெரிதாக்க இவர் எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்து உள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த இந்த நபர் தனது ஆணுறுப்பைப் பெரிதாக்க நினைத்து உள்ளார். இதற்காக மோதிரம் போன்ற உலக வளையத்தை அவர் தனது ஆணுறுப்பில் மாட்டிக் கொண்டு இருந்துள்ளார். இது அவரது உடல்நிலையையே கடுமையாகப் பாதித்துவிட்டது.

உலோக வளையம்
ஆணுறுப்பை அந்த இளைஞரால் பெரிதாக்க முடியாத நிலையில், அது அவருக்குத் தாங்க முடியாத வலியையும் கொடுத்து உள்ளது. 35 வயதான அந்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் ஆணுறுப்பைப் பெரிதாக்க அதில் உலோக வளையத்தை மாட்டி உள்ளார். இது ஆணுறுப்பைச் சுற்றி இறுக்கமாக இருந்ததால், அது ரத்த ஓட்டத்தைப் பாதித்து உள்ளது. எதோ சில நாட்கள் அந்த நபர் வளையத்தை அணிந்து இருக்கவில்லை.

4 மாதங்கள்
மொத்தம் 4 மாதங்கள் இப்படியே வளையத்துடன் அந்த நபர் அலைந்துள்ளார். ரத்த ஓட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், ஒரு கட்டத்தில் அந்த நபருக்குத் தாங்க முடியாத வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த நபர் உடனடியாக நொந்தபுரி மாகாணத்தில் உள்ள க்ருங்தாய் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இந்த நபர் செய்து இருப்பதைப் பார்த்து மருத்துவர்களே மிரண்டுவிட்டனர்.

தீயணைப்புத் துறையினர்
அவர்கள் இந்த நபரைக் காக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். அவர்களே அந்த வளையத்தை எடுக்க முயன்று உள்ளனர். ரத்தம் ஓட்டம் பாதிக்கப்பட்டதால் ஆணுறுப்பு வீங்கி உள்ளது. தங்களால் முடியாததால் அவர்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடி உள்ளனர். அவர்கள் வெல்டிங் கட்டர் உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்தி அந்த வளையத்தை அகற்ற முயன்று உள்ளனர்.

ஒரு மணி நேரம்
இந்த கூரிய கருவிகள் ஆணுறுப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதால் கவனமாக முயன்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர், அந்த நபரின் ஆணுறுப்பில் இருந்து வளையத்தை வெற்றிகரமாக நீக்கி உள்ளனர். கூரிய கருவிகளால் மேய்ந்து விடாமல் கவனமாக இருந்ததால் கிராமவாசியின் ஆணுறுப்பை விடுவிக்க ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது.

ரத்த ஓட்டம் பாதிப்பு
சரியான நேரத்தில் அந்த நபரின் ஆணுறுப்பில் இருந்து வளையம் அகற்றப்பட்டு உள்ளது. இல்லையென்றால் ஆணுறுப்பு தொற்று ஏற்பட்டு இருக்கும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆணுறுப்பைப் பெரிதாக்க அந்த நபர் எடுத்த முயற்சி குறித்த தகவல்கள் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 ஆண்டுகளாக
இது குறித்துத் தீயணைப்பு வீரர் ஒருவர் கூறுகையில், "ஆணுறுப்பைப் பெரிதாக்க வேண்டும் என்பதால் அந்த நபர் இப்படி முயன்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் போராடி நாங்கள் வளையத்தை வெற்றிகரமாக எடுத்துவிட்டோம். கடந்த 4 ஆண்டுகளில் பல முறை இப்படி அந்த நபர் செய்துள்ளாராம். ஆனால் இந்த முறை தான் இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.