60 கோடி ஆண்டுக்கு பின் ரகசியம்.. உலகை மிரள வைக்கும் அந்த விசித்திர புழு! கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்
பெர்லின்: உலகம் முழுவதும் உள்ள மனிதர்களாகிய நமக்கு இன்று 2 கண்கள் இருக்கின்றன. இந்த உலகத்தைப் பார்க்கும் திறன் நமக்கு இயல்பாகவே இருக்கிறது. ஆனால் இந்த பார்வை எங்கிருந்து வந்தது என்பது குறித்து பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.. அந்த ஆய்வுகளில், சுமார் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு புழு போன்ற உயிரினம் முக்கியமான பங்கு வகித்திருக்கலாம் எனப் புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதுதான் பலரையும் வியக்க வைத்து வருகிறது.
ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், இப்படியொரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.. இந்த ஆய்வில், கடலின் ஆழப் பகுதிகளில் வாழ்ந்த அந்த ஆரம்பகால உயிரினங்களில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

60 கோடி ஆண்டுகள் புழு
ஆரம்பத்தில் கண்கள் இல்லாத நிலையில் இருந்த அந்த உயிரினத்தின் மூளையில் இருந்த ஒரு சிறிய பகுதி ஒளியை உணரும் திறனைப் பெற்றிருந்ததாம்.. இந்தப் பகுதியே, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று, கண் அமைப்பின் ஆரம்ப வடிவமாக மாறியிருக்கலாம் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்..
இது பல கோடி ஆண்டுகள் நீண்ட பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது.. அந்த ஒளி உணரும் செல்கள் பிறகு சிக்கலான அமைப்பாக வளர்ந்து, இன்று மனிதர்களிலும் பிற உயிரினங்களிலும் காணப்படும் கண் அமைப்பாக உருவாகியுள்ளது என்பதுதான் இதில் குறிப்பிடப்படும் கருத்தாகும்.
மனித கண்கள் தனித்துவம்
இந்த ஆய்வில் இன்னொரு முக்கிய தகவலும் சொல்லப்பட்டுள்ளது.. அதாவது, அந்த ஆரம்பகால உயிரினத்தின் DNA எனப்படும் மரபணு அமைப்பு இன்று உள்ள நரம்பு மண்டலம் மற்றும் கண் செயல்பாடு தொடர்பான அமைப்புகளுடன் சில ஒற்றுமைகள் கொண்டதாக உள்ளது..
இதை இன்னும் எளிமையாக சொன்னால், மனித கண்கள் ஒரு தனித்துவமான புதிய உருவாக்கம் கிடையாது.. அது மிகப் பழமையான உயிரியல் அமைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சி எனப் புரிந்துகொள்ளப்படுகிறது..
இன்று நாம் பயன்படுத்தும் கண்கள் ஒரே நேரத்தில் உருவானவை கிடையாதாம்.. அது நீண்ட காலமாக இயற்கையில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவாக உருவான அமைப்பு என்கிறார்கள்.. அந்த ஆரம்ப ஒளி உணரும் அமைப்பே இன்று நமக்கு உலகத்தைப் பார்க்கும் திறனை வழங்கும் அடிப்படையாக உள்ளது..
பார்வை இழப்பு - மருத்துவ ஆய்வுகள்
இந்தக் கண்டுபிடிப்பு மூலம், பார்வை இழப்பு தொடர்பான மருத்துவ ஆய்வுகளுக்கும் புதிய திசை கிடைக்கலாம் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அந்தப் பழமையான உயிரினங்களில் இருந்த ஒளி உணரும் செல்களின் செயல்பாட்டைப் புரிந்துகொண்டால், எதிர்காலத்தில் சில பார்வை குறைபாடுகளுக்குப் புதிய சிகிச்சை முறைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இயற்கையின் பரிணாம வளர்ச்சி மிகவும் மெதுவாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுகிறது என்பதை இந்த ஆய்வு மீண்டும் ஒருமுறை காட்டுகிறது.. ஒரு சிறிய உயிரினத்தில் தொடங்கிய மாற்றங்கள், இன்று கோடிக்கணக்கான உயிரினங்களின் பார்வைத் திறனாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது..!!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications