"இந்தியா வழங்காத ஒன்றை.. தமிழ்நாடு வழங்குகிறது".. சர்வதேச ஊடகம் வெளியிட்ட நச் செய்தி.. என்ன காரணம்!?
சென்னை: இந்தியாவும், ஒன்றிய அரசும் வழங்காத ஒன்றை தமிழ்நாடு அரசும், முதல்வர் ஸ்டாலினும் வழங்குவதாக சர்வதேச ஊடகமான தி எக்கனாமிஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே அவர் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்று தேசிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. சில திட்டங்கள் சர்வதேச அளவில் கூட பெரிய அளவில் பாராட்டுகளையும், வரவேற்புகளையும் பெற்றது.
முக்கியமாக பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் இஸ்ரேல் போன்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இஸ்ரேல் ஊடகங்கள் பல இந்த திட்டத்தை பாராட்டி பேசி இருந்தது. தமிழ்நாடு எப்போதும் வளர்ச்சி திட்டங்களில் இது போன்று முன்னணியில் இருந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு
இந்த நிலையில் இந்தியாவும், ஒன்றிய அரசும் வழங்காத ஒன்றை தமிழ்நாடு அரசும், முதல்வர் ஸ்டாலினும் வழங்குவதாக சர்வதேச ஊடகமான தி எக்கனாமிஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது. "மீட் தி திராவிட ஸ்டாலின்" என்ற தலைப்பில் இந்த கட்டுரை தி எக்கனாமிஸ்ட் இதழின் அச்சு மற்றும் இணைய பதிப்பில் வெளியாகி உள்ளது. அதில் முதலில் ரஷ்ய தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்த சிறிய அறிமுகத்தோடு கட்டுரை தொடங்குகிறது.

பெயர்
முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஸ்டாலின் என்று பெயர் வைத்த நிகழ்வு, ஸ்டாலின் சென்னை மேயராக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது, மிசாவின் போது சிறைக்கு சென்றது என்று இந்த கட்டுரை ஸ்டாலினின் தொடக்க கால வரலாற்றை விவரித்து செல்கிறது.இந்தியாவில் பிரதமர் மோடிக்கு எதிராக திரளும் மாநில தலைவர்களான மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் போன்றவர்களின் வரிசையில் ஸ்டாலின் முக்கியமான இடத்தில் இருப்பதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரம்
தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் பொருளாதார ஆலோசனைகளை வழங்க வல்லுநர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது குறித்து இந்த கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை நிபுணர் குழுவை அமைத்துள்ளது. . அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிஆர்
இவர்களில் ரகுராம் ராஜன் உள்ளிட்ட சிலர் மோடியுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள். மோடியின் திட்டங்களை விமர்சித்தவர்கள். இவர்களை ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார். இந்த தேர்வு ஸ்டாலினுக்கும் விளம்பரத்தை விரும்பும் பிரதமர் மோடிக்கும் இடையிலான வேறுபாட்டை காட்டுவதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஒன்றிய அரசு
இந்தியாவில் ஒன்றிய அரசு கொடுக்காத ஒன்றை தமிழ்நாடு கொடுக்கிறது, அது திறன் மற்றும் தகுதி. தகுதிக்கும் திறமைக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மதிப்பு அளிக்கிறார். ஸ்டாலின் வேண்டுமானால் மேடை பேச்சில் வல்லவராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் தன்னை ஒரு சிறந்த ஆட்சியாளராக வரலாற்றில் நிறுவ முயன்று கொண்டு இருக்கிறார்.
Recommended Video

முன்னாள்
தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனை குழு குறித்து இதில் புகழ்ந்து எழுதி உள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அடங்கிய கொரோனா ஆலோசனை குழுவை அமைத்தது உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகள் வரை தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை பாராட்டி இந்த கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது.

மற்ற மாநிலம்
தமிழ்நாட்டின் நல்ல சுகாதார கொள்கைகள், மருத்துவ கட்டமைப்பு காரணமாக அவர்கள் கொரோனாவில் இருந்து வேகமாக விடுப்பட்டனர்.இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு இங்குதான் தனித்து தெரிகிறது. அதேபோல் திறன் வாய்ந்த முதல்வர் மூலம் தமிழ்நாடு மேலும் தனித்து தெரியும். இந்தியா வெளிக்காட்டாத திறனை தமிழ்நாடு வெளிக்காட்டுகிறது என்று தமிழ்நாடு அரசை பாராட்டி தி எக்கனாமிஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications