அம்மாவிற்காக உக்ரைனிலேயே தங்கிய மகள்.. மருந்து வாங்க சென்ற போது.. ரஷ்ய தாக்குதலில் பலி.. சோக பின்னணி

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைனில் உடல்நலம் குன்றிய தனது தாய்க்கு மருந்து வாங்குவதற்காக வெளியே சென்ற அந்நாட்டு பெண் மருத்துவர், ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியவுடன் பெண்களும் குழந்தைகளும் நாட்டை விட்டு தப்பிச்செல்ல உக்ரைன் அரசு அனுமதித்தது. பலர் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் சில பெண்கள் உக்ரைனிலேயே தங்கி இருக்கின்றனர்.

தாய்க்காக தங்கிய இளம் பெண்

தாய்க்காக தங்கிய இளம் பெண்

உக்ரைனை சேர்ந்த 31 வயது பெண் மருத்துவரான வெலெரிய்யா மக்செட்ஸ்காவின் தாய் இரினாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் குன்றிய தனது தாய்க்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் உதவுவதற்காக அண்டை நாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் உக்ரைனிலேயே தங்கினார் வெலெரிய்யா மக்செட்ஸ்கா.

மருந்துகள் இல்லாததால் தப்பிச்செல்ல முயற்சி

மருந்துகள் இல்லாததால் தப்பிச்செல்ல முயற்சி

இந்த நிலையில் அவரது தாய்க்கு தேவையான மருந்துகள் காலியாகி இருக்கின்றன. உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்களையும் ரஷ்ய படைகள் தகர்த்துவிட்டதால் உரிய மருந்துகளும் மருத்துவமும் கிடைக்காமல் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றார் வெலெரிய்யா மக்செட்ஸ்கா. தனது தாயை காரில் ஏற்றிக் கொண்டு ஓட்டுநருடன் உக்ரைனின் மேற்கு எல்லை நோக்கி அவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது ரஷ்ய படைகள் அவரது கார் மீது தாக்குதல் நடத்தின.

வீரப்பெண்மணி வெலெரிய்யா மக்செட்ஸ்கா

வீரப்பெண்மணி வெலெரிய்யா மக்செட்ஸ்கா

இதில், வெலெரிய்யா மக்செட்ஸ்கா, அவரது தாய் இரினா மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த வெலெரிய்யா மக்செட்ஸ்காவின் மரணத்தை அதன் நிர்வாகி சமந்தா பவர் உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் இரங்கல் செய்தியில், "வெலெரிய்யா மக்செட்ஸ்காவின் மரணச் செய்தியை பகிர்வதில் மிகுந்த வேதனை அடைகிறேன்.

பிறந்தநாளன்று இறந்த வெலெரிய்யா

பிறந்தநாளன்று இறந்த வெலெரிய்யா

சமூக ஒற்றுமையை கட்டியெழுப்பவும், வதந்திகளை தடுக்கவும் போராடியவர். பெருமைக்குரிய உக்ரைன் பெண்மணி அவர். இறக்க குணம் கொண்ட ஆளுமை. வெலெரிய்யா மக்செட்ஸ்கா தனது 32 வது பிறந்தநாளன்று ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டு இருக்கிறார். அவரை கொன்றதற்காக ரஷ்ய ராணுவம் வெட்கப்பட வேண்டும். டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிர் தப்பிய அவர், கீவுக்கு மாறியுள்ளார்.

மனிதாபிமானி வெலெரிய்யா

மனிதாபிமானி வெலெரிய்யா

ரமற்றவர்களுக்கு உதவுவதற்காக அவர் அங்கேயே தங்கியுள்ளார்." என்றார். ஷ்ய படைகளால் கொல்லப்பட்ட வெலெரிய்யா மக்செட்ஸ்கா, தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வந்தவர். ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிமியாவுக்குள் படையெடுத்தபோதே தனது இளம் வயதில் மக்களுக்கு குரல் எழுப்பியதுடன் பல்வேறு மனிதாபிமான உதவிகளை செய்து வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+