தாலிபான் தலைவரை நேர்காணல் செய்த.. பெண் பத்திரிகையாளர் ஆப்கானில் இருந்து வெளியேறினார்!
காபூல்: தாலிபான் பயங்கரவாதிகளின் முக்கியத் தலைவரை நேர்காணல் செய்த பெண் பத்திரிகையாளர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆப்கானில் அமைதி திரும்பினால் மீண்டும் அங்கு வருவேன் என்று அவர் கூறியுள்ளார்.
Recommended Video
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் இங்கு இருந்து வெளியேறினால் போதும் என்று ஆப்கான் மக்கள் ஆப்கனை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
''தாலிபான்கள் ஆட்சியில் சுதந்திரமாக நடமாட முடியாது. பெண்களின் உரிமை முழுவதுமாக மறுக்கப்படும்'' என்று ஆப்கான் மக்கள் பயம் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பெண் உரிமைகள் மறுப்பு
ஆனால் தங்களது ஆட்சியில் பெண்கள் உள்பட அனைவருக்கும் சுதந்திரம் கொடுக்கப்படும். ஷரியத் சட்டத்தின்படி பெண் உரிமைகள் மதிக்கப்படும் என்று தாலிபான்கள் கூறியபோதிலும் அதனை நம்ப மக்கள் தயாராக இல்லை. ஏனெனில் தாலிபான்களின் கடந்தகால வரலாறு அப்படியில்லை. இந்த நிலையில் தாலிபான் பயங்கரவாதிகளின் முக்கியத் தலைவரை நேர்காணல் செய்த பெண் பத்திரிகையாளர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

பெண் பத்திரிகையாளர்
ஆப்கானிஸ்தானில் டோலோ சேனலில் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட் ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு தாலிபான் தலைவர் மவுலவி அப்துல்லாஹ் ஹேமத்தை கடந்த 17-ம் தேதி நேர்காணல் செய்தார். தாலிபான்கள் பெண்களை அடிமையாக வைப்பார்கள் என்று தகவல்கள் பரவிய நேரத்தில் தாலிபான் தலைவரை பெண் பத்திரிகையாளர் இன்டர்வியூ செய்தது உலகம் முழுவதும் தலைப்பு செய்தியானது.

கிடுக்குப்பிடி கேள்வி
அதுவும் ஏதோ சம்பிரதாயத்துக்கு நேர்காணல் செய்யாமல், தாலிபான் தலைவரை பார்த்து துணிச்சலுடன் கேள்வி எழுப்பினார் பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட். கடந்த ஆட்சியைப் போல் காபூல் நகரில் வீட்டுக்கு வீடு சோதனை செய்யும் திட்டம் ஏதும் இருக்கிறதா? என்பது உள்ளிட்ட கிடுக்குப்பிடியான பல்வேறு கேள்விகளால் தாலிபான் தலைவரை திணறடித்தார். இந்த நேர்காணல் காட்சியும், பேஹஸ்டா அர்கான்ட் புகைப்படமும் உலகம் முழுவதும் வைரலானது.

வெளியேறி விட்டார்
தாலிபான்கள் மீதான அச்சம் காரணமாக தற்போது நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக பேஹஸ்டா அர்கான்ட் கூறியுள்ளார்.''தாலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி லட்சக்கணக்கான மக்களைப்போல் நானும் தேசத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. தாலிபான்கள் தங்களுக்கு வாக்குறுதியளித்ததைச் செய்து நிலைமையை மேம்படுத்தினால் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்புவேன். ஏறக்குறைய எங்கள் நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்'' என்று அவர் கூறினார்.

மலாலாவிடம் நேர்காணல்
இதற்கிடையே தாலிபான் படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய இளம்பெண் கல்வி ஆர்வலரான பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்பிடம் பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட் நேர்காணல் நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியில் மலாலா நேர்காணலில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications