குறிபார்த்து அடிக்கும் இஸ்ரேல்.. ஓடிக்கொண்டிருந்த வாகனத்தை ஒரே குண்டால் காலி செய்த திக் திக் வீடியோ
இஸ்ரேல்: இன்று அதிகாலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் குழுவினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் பெரும் சேதங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் பதில் தாக்குதில் தீவிரமாக இறங்கியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் நாட்டின் வரலாறு மோதலிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது. அதாவது யூத இனத்தை சேர்ந்த தியோடர் ஹெஸில் என்பர்தான் ஜியோனிஸம் எனும் சித்தாந்ததை உருவாக்கியவர். இதன் நோக்கம் யூத மக்களுக்கு என ஒரு தனி நாடு வேண்டும் என்பதுதான். இதற்காக அவர் பாலஸ்தீனத்தை தேர்ந்தெடுத்து அப்போதைய அரபு நாட்டின் ஆட்சியளர்களிடம் இது தொடர்பான விருப்பத்தை கூறினார். ஆனால், அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படியே காலங்கள் செல்ல, இவருக்கு பின் வந்தவர்கள் இதே கோரிக்கையை முன் வைக்க, பிரிட்டன் இந்த கோரிக்கையை ஏற்று யூதர்களை பாலஸ்தீனத்தில் குடியமர்த்த ஏற்பாடு செய்திகிறது. பிரிட்டனின் இந்த வழிமுறையை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள, அரபு நாடுகள் மறுதலித்தன. ஆனால் பிரிட்டனிடம் இருந்த படைகள் வலுவாக இருந்தால் அப்போதைக்கு சிறு சிறு எதிர்ப்புகளோடு இந்த பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டன. ஆனால் பிரிட்டன் படைகள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் இஸ்ரேலுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக 1947ம் ஆண்டு ஐநா பாலஸ்தீனத்தை மூன்றாக பிரித்தது. இங்குதான் பஞ்சாயத்து மீண்டும் வெடித்து கிளம்பியது.
அதாவது, பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 56% யூதர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை அப்போது வெறும் 30%தான். இதே 70% என பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு 43% நிலப்பரப்புதான் ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே எங்கள் மண்ணில் ஆக்கிரமிப்பு செய்துவிட்டீர்கள், இப்போது பாக பிரிவினையிலும் ஒருதலைபட்சமா? என கேள்வியெழுப்பி பாலஸ்தீனம் சண்டை செய்ய தொடங்கிவிட்டது.
இந்த பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதலில் தீவிரமாக இறங்கியிருந்தது. இந்த பின்னயில்தான் இன்று காலை இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்திருந்தது.
ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ராக்கெட்களை ஏவி இஸ்ரேலை ஹமாஸ் போராளிகள் நிலைக்குலைய செய்துள்ளனர். மட்டுமல்லாது இந்த போராளிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாகவும் இஸ்ரேல் விமர்சித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் போர் நிலையை அறிவித்துள்ளது. இத்துடன் நின்றுவிடாமல் பதில் தாக்குதலிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்த ஆப்ரேஷனுக்கு 'இரும்பு வாள்' என இஸ்ரேல் பெயரிட்டுள்ளது. உலகின் மிகவும் வலிமை வாய்ந்த ராணுவம் கொண்ட முதல் 20 நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.
עשרות מטוסי קרב של חיל האוויר תקפו לפני זמן קצר במספר מוקדים מטרות של ארגון הטרור חמאס ברצועת עזה.
— צבא ההגנה לישראל (@idfonline) October 7, 2023
דובר צה"ל שב ומבקש מהציבור להישמע להנחיות פיקוד העורף, המצילות חיים.
תיעוד מהתקיפות מוקדם יותר: pic.twitter.com/pnxdRyv4Un
இந்த நாட்டின் விமானப்படை தனிச்சிறப்புமிக்கதாகும். இப்படி இருக்கையில் போர் விமானங்களை கொண்டு இந்த ஆப்ரேஷன் இரும்பு வாளை இஸ்ரே மேற்கொண்டு வருகிறது. கசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளின் படை முகாம்கள் மீது, அவர்கள் அதிக அளவில் தங்கியிருக்கும் இடத்தின் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழையை பொழிந்து வருகின்றன. இது தொடர்பான வீடியோக்களை இஸ்ரேல் ராணுவம் வெளியாகியுள்ளது. அதில் ஹமாஸ் படையின் வாகனங்கள் மீது குண்டு வீசப்படுகிறது. அடுத்த நொடியே அந்த வாகனம் முழுவதுமாக தீப்பற்றி எரிந்துவிடுகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகவும் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேபோல இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் முன் வந்துள்ளன. இந்த போருக்கு தீர்வு காண்பதற்கு சவுதி அரேபியா அழைப்பு விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications