ருசியான ஜப்பானிய அரிசி கேக் மோச்சி உயிரை பறித்தது எப்படி?

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil
ஜப்பான் அரிசி கேக்
AFP
ஜப்பான் அரிசி கேக்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக நாட்டின் பாரம்பரிய அரிசி கேக்கை உண்டு தொண்டையில் அடைத்துக் கொண்டதால் ஜப்பானில் இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள் மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.

அவை ஆபத்தில்லாதவை போல தோன்றலாம் ஆனால் ஒவ்வொரு வருடமும் சாப்பிடுவதற்கு கடினமான இந்த சிற்றுண்டி பலரது உயிரை பறித்திருக்கிறது.

மோச்சி என்பது என்ன?

மோச்சி என ஜப்பானில் அறியப்படும் கேக்குகள் அழகான உருண்டையான பன். இவை மெதுவான மற்றும் கோந்து போன்ற அரிசியில் இருந்து உருவாக்கப்படுகிறது.

முதலில் அரிசி நீராவியில் வேகவைக்கப்பட்டு பின்னர் தூளாக்கி மாவாக பிசையப்படுகிறது. ஒட்டிக்கொண்டிருக்கும் அரிசி துகள்கள் இறுதியில் மோச்சி உருவத்தை அடைகின்றது அதன்பிறகு தீயில் வாட்டப்பட்டு அல்லது வேகவைக்கப்பட்டு உணவாக பயன்படுத்தப்படுகிறது.

குடும்பத்தினர் பாரம்பரியமாக புத்தாண்டை கொண்டாட காய்கறி சாற்றோடு மோச்சியை சேர்த்து சமைத்து பயன்படுத்தப்படுகிறது

கிரில் மோச்சி
Getty Images
கிரில் மோச்சி

பாதிப்பு உண்டாவது எப்படி?

இந்த பன் கோந்து போன்றும் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடனும் இருக்கின்றனது. சாப்பிடும்போது பற்களால் கடிக்கும் அளவைவிட பெரிய அளவில் இருப்பதால் விழுங்குவதற்கு முன்பு நன்றாக பற்களால் அரைத்து பிசைய வேண்டியதிருக்கும்.

இந்த உணவை வாய் மூலம் நன்றாக அரைக்க முடியாத சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் இதனை உண்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.

ட்ரேவில் மோச்சி
AFP
ட்ரேவில் மோச்சி

வாயில் ஒழுங்காக அரைக்காமல் விழுங்கிவிட்டால் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடைய இந்த மோச்சி தொண்டையில் ஒட்டிக்கொள்ளும் . இது மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும்.

இதனை பாதுகாப்பாக உண்பதுஎப்படி?

வாயில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அரைத்து விழுங்குங்கள். அது சாத்தியமில்லையெனில் இந்த அரிசி கேக்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டிச் சாப்பிடுங்கள்.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டின்போது அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள். குறிப்பாக மிகவும் இளமையான மற்றும் முதுமையானவர்கள் மோச்சியை சிறு துண்டுகளாக வெட்டியே உண்ணவேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

Mochi on a tray
AFP
Mochi on a tray

இந்த எச்சரிக்கைகள் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இந்த உணவைச் சாப்பிட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தே வருகிறது. 2015 புத்தாண்டில் ஒன்பது பேர் இறந்தனர், 2016-ல் புத்தாண்டில் ஒருவரும் பின்னர் மற்றொருவரும் இறந்தனர்.

ஒவ்வொரு வருடமும் இந்த உணவை உண்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கவலைக்கிடமான நிலையில் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிற செய்திகள்


BBC Tamil
English summary
Two people have died in Japan and several are in a critical condition after choking on traditional rice cakes as part of the new year celebrations.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற