டீயில் பாய்சன்.. 4வது முறையாக கொலை முயற்சி.. ரஷ்யாவில் புடினே பார்த்து நடுங்கும் ஒரு நபர்.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸை ஏ நாவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பே மூன்று முறை இவரை கொலை செய்ய சதி திட்டம் போடப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் யாருக்கும் பயப்படாத அதிபர் புடினே இவரை பார்த்து பயப்படுகிறார், புடின்தான் நாவல்னி மீதான இந்த திடீர் தாக்குதலுக்கு காரணம் என்றும் கூட ரஷ்ய ஊடகங்கங்கள் தெரிவிக்கிறது.

Recommended Video

    Corona Vaccine உற்பத்தி.. India- ன் உதவியை தேடி வரும் Russia

    ரஷ்யாவின் அதிபர் புடின், தன்னை எதிர்க்க ஆள் இல்லாமல் இருபது வருடங்களுக்கும் மேலாக அதிபர், பிரதமர் என்று பல்வேறு பதிவுகளை ரஷ்யாவில் வகித்து வருகிறார். புடினை எதிர்க்கும் எல்லோரும் ஒன்று நாடு கடத்தப்படுகிறார்கள், இல்லை கைது செய்யப்படுகிறார்கள், அதுவும் இல்லை எனில் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள்.

    அதிலும் பல முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் உடலில் விஷம் கலக்கப்பட்டு மரணம் அடைந்து உள்ளனர். ஆனால் இதில் எதிலும் புடின் இதுவரை நேரடியாக குற்றஞ்சாட்டப்படவில்லை.

    நாவல்னி எப்படி

    நாவல்னி எப்படி

    இந்த நிலையில்தான் அந்த வரிசையில் புதிதாக தற்போது ரஷ்யாவில் எதிர்க்கட்சிகளின் முகமாக பார்க்கப்படும் நாவல்னி சேர்ந்து இருக்கிறார். நேற்று சேர்பியாவில் இருந்து மாஸ்கோவிற்கு விமானத்தில் வந்தவர், விமானத்திலேயே மூச்சு விட முடியாமல் திணறி, அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனால் விமானம் வேகமாக திருப்பப்பட்டு, சேர்பியாவில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் நாவல்னி சேர்க்கப்பட்டார். இவரின் உடலில் விஷம் கலந்து இருக்கலாம். அதுதான் அவர் மயங்கியதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

    டீ குடித்தார்

    டீ குடித்தார்

    நாவல்னி விமான நிலையத்தில், கடை ஒன்றில் டீ குடித்து உள்ளார். அன்று அவர் வேறு எதுவும் சாப்பிடவில்லை. இதனால் இவரின் டீயில் மர்ம நபர்கள் விஷம் கலந்து இருக்கலாம் என்று புகார் வைக்கப்படுகிறது. தற்போது இவர் கோமாவில் படுத்துவிட்டார். ஆனால் இவருக்கு விஷம் கொடுக்கப்படவில்லை என்று செர்பியாவின் ஒரு தரப்பு தெரிவிக்கிறது. மருத்துவர்கள் சிலர் விஷம் குறித்த புகாரை மறுத்துள்ளனர், சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    என்ன சந்தேகம்

    என்ன சந்தேகம்

    இந்த நிலையில், இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளது. முதல் விஷயம், இவரை அவசர சிகிச்சைக்கு அழைத்து வந்த போது, இரண்டு செர்பியன் மருத்துவமனைகள் வேண்டும் என்றே இவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டது. இவரின் சிகிச்சையை தாமதமாக்க வேண்டும் என்று, வேண்டும் என்றே இப்படி அவரையே அலைய விட்டு இருக்கிறார்கள்.

    எத்தனையாவது முறை

    எத்தனையாவது முறை

    அடுத்த சந்தேகம், இவரை நான்காவது முறையாக இப்படி கொல்ல முயற்சி நடக்கிறது. கடந்த வருடம் இவருக்கு ஜெயிலில் கெமிக்கல் ஒன்று கொடுக்கப்பட்டது. அதனால் இவர் உயிருக்கு தீவிரமாக போராடி பின் மீண்டு வந்தார். இரண்டு வருடம் முன் நாவல்னிக்கு ஒருவர் கை கொடுக்கிறேன் என்று இவரின் கையில் ஒருவர் பச்சை நிற விஷத்தை தடவினார். இதனால் இவருக்கு அலர்ஜி ஏற்பட்டு உயிருக்கு போராடினார் .

    கொலை தாக்குதல்கள்

    கொலை தாக்குதல்கள்

    மேலும் 2011ல் இவரை ஜெயிலில் இன்மேட்கள் தீவிரமாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு கடைசி நொடியில் இவர் காப்பாற்றப்பட்டார். இப்போது டீயில் இவருக்கு விஷம் கலக்கப்பட்டு உள்ளது. இப்படி இதுவரை 4 முறை இவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இவரை இப்படி கொலை செய்ய வேண்டும் என்று யார் முயற்சிப்பது என்றால்.. ரஷ்ய எதிர்க்கட்சிகள் புடினை கைகாட்டுகிறார்கள்.

    புடின் ஏன்

    புடின் ஏன்

    புடின் இப்போது ரஷ்யாவில் பயப்படும் ஒரே நபர் நாவல்னிதான். அவர்தான் புடினின் ஊழலை எல்லாம் வெளியே கொண்டு வந்தது. நாவல்னி அங்கு தொடர்ந்து பல்வேறு ஊழல்களை வெளியே கொண்டு வந்துள்ளார். புடினின் இமேஜை உடைத்தது நாவல்னிதான். இவரை தேர்தலில் நிற்க விடாமல் புடின் தடுத்து வருகிறார். இதனால் இவர் கொல்ல புடின் ஹிட் மேனை அனுப்பிவிட்டார் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தெரிவிக்கிறது.

    எதிர்க்கட்சி முகம்

    எதிர்க்கட்சி முகம்

    புடினுக்கு எதிரான வலுவான முகமாக நாவல்னிதான் பார்க்கப்படுகிறார். நாவல்னி வளர்ந்தால் புடின் காலியாகிவிடுவார். எப்போதும் எதிர்ப்பே இல்லாமல் புடின் வாழ்ந்தவர். இதனால் எப்படியாவது நாவல்னியை தீர்த்து கட்ட வேண்டும் என்று புடின் நினைக்கிறார் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கூறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+