10,000 தீவிரவாதிகள்... இங்கிலாந்து "சைஸ்" நிலப்பரப்பு ஐஎஸ்ஐஎஸ் பாக்கெட்டில்!

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: 10,000 தீவிரவாதிகளுடன் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அபாயகரமான இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் தற்போது இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பை தன் வசம் வைத்துள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது நிச்சயம் சாதாரண விஷயமல்ல. மிகப் பெரிய அச்சுறுத்தலைத் தரும் விஷயமாகும். ஐஎஸ்ஐஎஸ் நாளுக்கு நாள் பலமாகி வருகிறதே தவிர அதன் வீரியம் குறைந்ததாக தெரியவில்லை.

சிரியாவில்தான் முதலில் இந்த இயக்கம் தனது தாக்குதலைத் தொடங்கியது. பின்னர் அப்படியே ஈராக்குக்குள் நுழைந்து இன்று மிகப் பெரிய அளவில் அபாயகரமான இயக்கமாக மாறி நிற்கிறது.

அஸ்ஸாத்துக்கு எதிராக

அஸ்ஸாத்துக்கு எதிராக

சிரிய அதிபர் பாஷர் அஸ்ஸாத்துக்கு எதிரான புரட்சி அமைப்பாகத்தான் முதலில் ஐஎஸ்ஐஎஸ் தொடங்கப்பட்டது. அப்போது இதன் அபாயகரமான முகத்தை யாரும் சரிவர கவனிக்கவில்லை.

வடக்கு ஈராக் கபளீகரம்

வடக்கு ஈராக் கபளீகரம்

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வடக்கு ஈராக்கை கபளீகரம் செய்தபோதுதான் இதன் ஷாக் பின்னணி குறித்து அனைவரும் அறிந்து அதிர்ந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பு

இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பு

இன்று இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பை வைத்துள்ளது ஐஎஸ்ஐஎஸ். சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை இது வளைத்து விட்டது.

எண்ணெய் விற்பனையிலும்

எண்ணெய் விற்பனையிலும்

வெறும் தீவிரவாத அமைப்பாக மட்டும் இல்லாமல் இது எண்ணெய் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 6 லட்சம் பவுண்டு பணத்தையும் சம்பாதிக்கிறது. அது மட்டுமல்லாமல் பிணையாளிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் மூலமாகவு்ம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்.

10,000 அதி பயங்கர தீவிரவாதிகள்

10,000 அதி பயங்கர தீவிரவாதிகள்

இந்த அமைப்பில் 10,000 அதி பயங்கர தீவிரவாதிகள் உள்ளனர். நவீன ஆயுதங்களை வைத்துள்ளனர்.

சிரியா, ஈராக்கின் பலவீனமே காரணம்

சிரியா, ஈராக்கின் பலவீனமே காரணம்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வசம் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு சிக்கக் காரணம், சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள மிகவும் பலவீனமான அரசுகளும், உள்நாட்டுக் குழப்பங்களுமே.

அல் கொய்தாவை ஓரம் கட்டியது

அல் கொய்தாவை ஓரம் கட்டியது

தற்போதைய நிலையில் அல் கொய்தா அமைப்பை இந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கிட்டத்தட்ட ஓரம் கட்டி விட்டது. உலகின் பல்வே்று பகுதிகளிலும் இயங்கும் தீவிரவாதிகளுக்கு முன்மாதிரியாக மாறி விட்டது.

மொத்தத்தில் உருவெடுத்த குறுகிய காலத்திலேயே உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது இந்த அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. இதை முற்றாக ஒழிப்பதில்தான் மிகப் பெரிய அபாயகரமான எதிர்காலத்தை நாம் தடுப்பதில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+