Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகில் கொரோனாவால் ஒரே நாளில் 5002 பேர் மரணம்.. ஷாக் தரும் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா : உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,77,218 பேர் மரணம் அடைந்துள்ளனர். தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

தற்போது உலகில் கொரோனாவால் இறக்கும் ஐந்து பேரில் ஒருவர் இந்தியர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளத. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 921 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரம் உலக அளவில 5002 பேர் நேற்று மரணம் அடைந்துள்ளனர்.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,74,50,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 10,77,218 பேர் மரணம் அடைந்தனர். எனினும்
உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,80,97,823 பேர் மீண்டனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 82,75,107 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

அமெரிக்காவில் 80 லட்சம் பேர்

அமெரிக்காவில் 80 லட்சம் பேர்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கி உள்ளது. தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 7,944,944 ஆக உள்ளது, அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,051,543 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா பாதிப்பு 5,091,840 ஆக உள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,285,084 ஆக உயர்ந்துள்ளது.

புதிய பாதிப்பு எண்ணிக்கை

புதிய பாதிப்பு எண்ணிக்கை

உலகிலேயே நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மிக அதிகபட்சமாக 74,535 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 50315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் புதிதாக 34,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் 12,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா முதலிடம்

அமெரிக்கா முதலிடம்

கொரோனா தொற்றால் உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 219,281 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 150,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3வது நாடாக இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 108,371 பேர் மரணம் அடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் கொரோனாவால் இதுவரை 83,507 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 921 பேர் மரணம்

921 பேர் மரணம்

உலகில் கடந்த 24 மணி நேரத்தில் 5002 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில் 921 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 634 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 544 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 411 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி உலகில் கொரோனாவால் இறக்கும் ஐந்து பேரில் ஒருவர் இந்தியர் ஆவர். உலகில் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+