ஆசிட் வீசியவனையே கரம் பிடித்த பெண்.. கொரோனாவால் மீண்டும் பூத்த காதல் கதை..!
அங்காரா: துருக்கியில் தன் முகத்தின் மீது ஆசிட் வீசிய காதலன் தண்டனைக்குப் பிறகு மன்னிப்பு கூறியதால் இளம்பெண் ஒருவர் அவரையே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது
காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்தாலோ அல்லது காதலை பெண்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்கள் மீது ஆசிட் வீசும் கொடூரமான கலாச்சாரம் இன்னும் சில இடங்களில் அரங்கேறி வருகிறது.
டெல்லி மும்பை சென்னை என இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த கொடூர மனப்பான்மை கொண்டவர்கள் சுற்றித் திரிவது வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல ஒரு சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியிலும் நடைபெற்றது.

துருக்கி காதல் கதை
துருக்கியின் ஹடாய் மாநிலத்தில் இஸ்ஹெண்டிரூன் என்ற ஊரைச் சேர்ந்த ஹசீன் ஒசன் செடிக் என்பவரும் , 20 வயது இளம்பெண்ணான அதே பகுதியில் வசித்து வந்த பெர்பின் ஒஜிக் என்பவரும் நீண்ட நாட்களாக சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மூலம் காதலையே வளர்த்தவர்கள் பிறகு பல இடங்களில் சுற்றித் திரிந்தனர் சில நேரங்களில் அவர்களுக்குள்ளே மனக்கசப்புகள் ஏற்பட்டு சிறிய சிறிய சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

காதலி மீது ஆசிட் வீச்சு
ஒரு கட்டத்தில் மோதல் உருவாகி இருவரும் நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தனர் பின்னர் பெரும்பான்மை காதலிக்கவில்லை என்றும் தங்களது உறவை முறித்துக் கொள்வதாக கடந்த 2019ஆம் ஆண்டு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹசீம் தன்னை விட்டுப் பிரிந்த ஒஜிக்கின் முகத்தில் ஆசிட் ஊற்றினார் . அப்போது தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார், உடலில் பெரும்பாலான இடங்கள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு 70 சதவீத கண்பார்வையும் ஒஜிக்குக்கு பரிபோனது இருந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பலமாத சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்து தனது வீட்டுக்கு திரும்பினார்.

காதலனுக்கு தண்டனை
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் தன் மீது ஆசிட் வீசியது தனது காதலன் தான் என பெர்பின் கூறியதை அடுத்து அவருக்கு 13.6 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது தன் தவறை உணர்ந்த ஹசீர் தனது காதலியான பெர்ஃபினுக்கு கடிதம் எழுதினார். அதில் தான் இன்னும் உன்னைத்தான் காதலிப்பதாகவும், ஆத்திரத்தில் தவறு செய்து விட்டதாகவும் கூறியுள்ளார் .இதைத் தொடர்ந்து இருவரும் மாறி மாறி கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொரோன காரணமாக சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து பெஃர்பினை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்டதோடு, அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்டதால் திருமணம்
இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட நாட்களாக தனி அறையில் இருந்த நான் கடிதங்கள் மூலம் தன் காதலை வெளிப்படுத்தியதாகவும் இதையடுத்து திருமண முடிவுக்கு வந்ததாக இருவரும் தெரிவித்தனர். தற்போது உலகம் முழுவதிலும் இருந்து இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கொரோனா செய்த ஒரே புண்ணியம் இந்த காதல் ஜோடியை சேர்த்து வைத்ததுதான் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications