போரில் முன்னேற்றம் இல்லை.. பாதுகாப்பு துறை துணை அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்யும் உக்ரைன் அரசு

Subscribe to Oneindia Tamil

கீவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு மேல் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தனது 6 துணை பாதுகாப்பு அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து அதன் மீது ரஷ்யா போரை தொடுத்துள்ளது. போர் தொடங்கி சுமார் 17 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையை அமெரிக்கா 'நேட்டோ' அமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது.

The Zelenskyi government dismissed Ukraines deputy defense ministers altogether

எதிர் பார்த்தபடி பெரும்பாலான முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட, உக்ரைனும் இதில் இணைவதாக கையெழுத்திட்டது. இங்குதான் சர்ச்சை வெடித்தது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது பக்கத்து நாடான ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே உக்ரைன் இதில் இணைய கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் பேச்சை கேட்காத உக்ரைன் இதில் இணைவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தது. எனவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.

இந்த போரில் தற்போது வரை சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15,779 பேர் படுகாயமடைந்துள்ளனர். போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா செய்துள்ளது.

இன்று மேலும் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. இது உக்ரைனை மிகவும் பலம் வாய்ந்த ராணுவ நாடாக மாற்றியிருக்கிறது. சுருக்கமாக சொல்வதெனில் இந்தியாவின் ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட்டில் சுமார் 95% அளவுக்கு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போரின் தீவிரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. இப்படி என்னதான் போர் தீவிரமடைந்தாலும் தற்போது வரை உக்ரைனால் ரஷ்யாவை வீழ்த்த முடியவில்லை.

மட்டுமல்லாது ரஷ்யாவின் முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்படி இருக்கையில்தான் ஜெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு தனது அமைச்சரவையை மாற்ற முடிவெடுத்துள்ளது. அதன்படி பாதுகாப்பு துறையில் உள்ள 6 துணை அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 6 பேரில் ஹன்னா மாலியாரும் ஒருவர். இவர் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் குறித்த பொது அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டார்.

இந்த பதவிநீக்கத்திற்கான காரணத்தை உக்ரைன் அரசு இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. முன்னதாக ஏற்கெனவே இருந்த பாதுகாப்பு அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதியதாக ருஸ்டெம் உமெரோவ் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+