ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு.. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.. ஊரடங்கால் சாதித்த போர்ச்சுகல்!
லிஸ்பன்: கடுமையான ஊரடங்கு விதிகள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் போர்ச்சுகலில் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகல் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஜனவரி மாத இறுதியில் போர்ச்சுகல் உலகின் மிக மோசமான பாதிப்புகளை எட்டியது.
இதனால் கொடிய கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர போர்ச்சுகல் முழு ஊரடங்கு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஊரடங்கின் மூலம் நல்ல பலன்களை அறுவடை செய்துள்ளது போர்ச்சுகல். அதாவது கடந்த 24 மணி நேரத்தில் போர்ச்சுகலில் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

போர்ச்சுகலில் 2-வது முறையாக கொரோனாவுக்கு இறப்புகள் ஏற்படவில்லை. கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தினசரி இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அந்த நாடு அறிவித்து இருந்தது. போர்ச்சுகல் இதுவரை மொத்தம் 16,965 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. இதுவரை 8,34,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போர்ச்சுகலில் போடப்பட்டுள்ள ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் , அருங்காட்சியகங்கள், உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ' நாடு தற்போது 'பசுமை' மண்டலத்தில் உள்ளது. கொரோனா பரவல் விகிதம் மக்கள்தொகை அளவோடு ஒப்பிடும்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகக் குறைவாக உள்ளது'' என்று தெரிவித்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications