அபுதாபியில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அபுதாபி: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள இந்தியன் சமூக மற்றும் கலாச்சார மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை சிவக்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அமீரக தமிழ்நாடு பொறியாளர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

விழா மலரை இந்தியன் சமூக, கலாச்சார மைய தலைவர் பணிக்கர் வெளியிட சின்னப்பராஜ் சிவக்குமார் பெற்றுக் கொண்டார். மதுரை தியாகராஜர் கல்லூரி தலைவர் கண்ணன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை சதீஷ் வாசித்தார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அபய்குமார் அனுப்பிய உரை திரையிடப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கூட்டமைப்பு செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்கள் தங்கள் உடன் படித்த மாணவர்களை சந்தித்து அகமகிழ்ந்தனர். அப்போது நண்பர்கள் ஒவ்வொருவரும் தனது பழைய நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் கைகுலுக்கியும், ஆரத்தழுவியும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் அவர்கள் கல்லூரி காலங்களில் நடந்த சுவாரஸ்யமான பழைய மலரும் நினைவுகளைபகிர்ந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது சிலர் தங்களின் பழைய நண்பரை நீண்டகாலத்திற்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு
கல்லூரி முன்னாள் மாணவர்களும், அமீரக தமிழ்நாடு பொறியாளர் சங்க உறுப்பினர்களும் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து இருந்தனர். அவர்களை தங்களது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து கர்நாடக இசை ஆசிரியை லட்சுமியின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் நிகழ்ச்சியின் போது பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அமீரகத்தில், அனைத்து கல்லூரிகளிலும் படித்த தமிழ்நாடு பொறியாளர் சங்கத்தை மேம்படுத்துவது குறித்த கருத்தாய்வும் நடைபெற்றது. இது குறித்து பேசிய சின்னப்பராஜ் சிவக்குமார், அமீரகத்தில் தமிழ் பொறியாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர், அவர்களை ஒருங்கிணைத்து கருத்துப் பரிமாற்றம் செய்து ஒத்துழைத்துக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்ட்டது என்று கூறினார்.
அபுதாபியில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரெஜினால்டு, முரளீதரன், கிறிஸ்டோபர், லக்ஷ்மணன், அன்பழகன், அண்ணாமலை, சலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சின்னப்பராஜ் சிவகுமார் தலைமையில் ராஜா, உதயகுமார், கோல்டன் சரவணன், முத்து குமரவேல், திருமதி.மணிமேகலை, ரத்தினகுமார், செந்தில், செழியன், முனீஸ்வரன், சையது, மன்னவன், மணிமாறன், சுரேஷ்முத்து கிருஷ்ணன், தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களும் ஐக்கிய அரபு அமீரக பொறியாளர் சங்கமும் ஏற்பாடு செய்திருந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications