லண்டனில் களைகட்டிய திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா
லண்டன்: லண்டனில் தமிழர் முன்னேற்ற கழகம் நடத்தும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா கடந்த 18ம் தேதி பிளாசட் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவை த.மு.க. தலைவர் திரு. நாகதேவன் தொடங்கி வைக்க, திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி தவமணி மனோகரன் ஒருங்கிணைத்தார். இந்த விழாவிற்கு வழக்கறிஞர் திரு. சிதம்பரப்பிள்ளை மற்றும் டாக்டர் திருமதி சிதம்பரப்பிள்ளை ஆகியோர் தலைமை ஏற்று சிறப்பித்தனர்.

தாய்மொழியாம் தமிழ்மொழியை சிறப்பிக்கும் வகையில் செந்தமிழே வணக்கம் என்ற தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மேலும் தமிழுக்காக, தமிழருக்காக தொண்டாற்றிய தியாகிகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பேச்சு, பாட்டு, நடனம், நாடகம், வீணை இசை ஆகிய இனிய கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் ஆண்டுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டன. தொண்டு மனப்பான்மையோடு பல ஆண்டுகளாக திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளிக்கு வாரந்தோறும் வருகை தந்து பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிக்கும் மூதாட்டி திருமதி பாலசிங்கம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

சில மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி என்பதும், கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் பயிற்றுவித்து வருகிறது என்பதும் இதன் கூடுதல் சிறப்பு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications